அழியப்போகிறதா உலகம்? பாபா வங்கா சொன்ன மாதிரி நடக்குதே.. நாஸ்ட்ரடாமஸும் அதே சொல்றாரு.. 2025 வேற வருதே
நியூயார்க்: 2025ம் ஆண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், பாபா வங்கா மற்றும் பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாஸோ இருவரின் கணிப்புகளும் இணையத்தில் வைரலாக துவங்கியிருக்கின்றன. இதை பார்த்து உலக மக்கள் வியப்படைந்து வருகிறார்கள்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா என்பவர் பல்கேரியா நாட்டை சார்ந்தவர்.. 12 வயதில் இவரது கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறிபோய்விட்டது.. அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக அவர் கூறியிருக்கிறார்.

கணிப்புகள்: அத்துடன், எதிர்காலத்தில், எந்த வருடத்தில், என்னென்ன நடக்கும் என்பதெல்லாம் இவருக்கு தினமும் காட்சிகளாக வந்ததாம்.. தனக்கு மனதில் தோன்றியதை எல்லாம், கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார்... இப்படி எதிர்காலத்தை கணித்து சொல்வது, கடவுள் தனக்கு தந்த சக்தியாக கருதினார் பாபா வங்கா.
ஆனால், இவர் கடந்த 1996ல் இறந்துவிட்டார். எனினும், இவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் அப்படியே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இவரது பெரும்பாலான கணிப்புகளும் கிட்டத்தட்ட அப்படியே நடந்து வருகிறது.
இந்த 2024-ம் ஆண்டுக்கும் கணிப்புகளை எழுதி வைத்திருந்தார்.. இவரின் கணிப்பின்படி, இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக் கிளிகள் வந்து விவசாய பயிர்களை தாக்குதல் நடத்தும், இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழியப் போகிறார்கள் என்று கணித்திருந்தார்.
ஐரோப்பா: ஐரோப்பா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும், புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும், புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் உருவாகும்,
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார், அது அவரை காது கேளாதவர் ஆக்கிவிடும்.. மூளையில் கட்டி ஏற்பட்டு, அதனால் பெரிதாக பாதிக்கப்படுவார்" என்றெல்லாம் பாபா வங்கா கணித்து வைத்திருந்தது கண்டு உலக மக்கள் அதிர்ந்தனர்.
டொனால்டு டிரம்ப்: ஆனால், அதன்படியே, கடந்த ஜூலை 13ம் தேதி, பென்சில்வேனியாவின், டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில், டிரம்பின் வலது காதின் மேல் பகுதியில் துளைத்தபடி குண்டுசென்றது.. டிரம்ப் பற்றி பாபா வங்காவின் கணிப்பு, துல்லியமாக இருந்ததாகவே அப்போது அனைத்து பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டிருந்தன..
விரைவில் டிசம்பர் மாதம் வரஉள்ள நிலையில், வரப்போகும் 2025ம் ஆண்டையும் பாபா வங்கா கணித்து வைத்திருக்கிறார்.. அந்தவகையில், 2025ம் ஆண்டில் உலக அளவில் ஒரு மாபெரும் பேரழிவு நிகழ இருப்பதாக கணித்துள்ளார் பாபா.. ஐரோப்பாவில் எழும் ஒரு பிரச்சினை குறித்து கணித்துள்ள பாபா, 2025-ல் இரு நாடுகளுக்கிடையே ஒரு போர் உருவாகும் என்றும், அது உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார்.
ஜோதிடக்கலைஞர்: பாபா வங்காவை போலவே, பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸோ வேறு காலகட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1566ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார். ஆனால் இவரும் 2025 ஆண்டு எப்படி இருக்கும்? என்று கணித்துள்ளார்.. இவர் எழுதிவைத்திருக்கும் கணிப்புகளில் 2025ல், பயங்கர போர்கள் வெடிக்கும் என்றும் மாபெரும் பேரழிவு ஏற்படும் என்றும் எழுதிவைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும், பிரேசில் நாட்டில், எரிமலை வெடிப்பு மற்றும் மோசமான பெருவெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். அதேபோல சில வேற்று கிரக சந்திப்புகளுக்கு தயாராகுமாறு இருவருமே எச்சரித்துள்ளனர். ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வில் வேற்றுகிரகவாசிகள் தோன்றுவார்கள் என்று பாபா வங்காவும், சில வகையான "செவ்வாய்ப் போர்" தொடங்கும் என்றும், முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் நாசமாகும் என்று நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ளார்.
பாபா வங்காவும், நாஸ்ட்ரடாமஸும் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இருவருமே 2025ம் ஆண்டைக் குறித்து ஒரேவிதமாக கணித்து வைத்துள்ளனர்.. இப்படி வரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து இருவருமே துல்லிய கணிப்புகளை தந்துவிட்டு போயிருக்கிறார்கள்... இது ஒருபக்கம் வியப்பையும், மற்றொரு பக்கம் கிலியையும் தந்து கொண்டிருக்கிறது.
உலகம் எப்போது அழியும்: ஆனால், வரும் 5079ஆம் ஆண்டு வரை மட்டுமே பாபா வங்கா கணித்து எழுதியிருக்கிறார்.. காரணம், அந்த வருடம்தான் உலகம் அழிய போகிறதாம்.. எனவே, அத்துடன் தன்னுடைய கணிப்புகளை முடித்துக் கொண்டுள்ளார்..!!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications