புடின் ஒரு "வார் கிரிமினல்".. நேரடியாக சீண்டிய பிடன்.. இது மன்னிக்க முடியாத குற்றம்! பாய்ந்த ரஷ்யா!
நியுயார்க்: அமெரிக்க அதிபர் பிடன் ரஷ்ய அதிபர் புடினை " போர் குற்றவாளி" என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். என்னதான் மோதல் இருந்தாலும் அமெரிக்க அதிபர்கள் இப்படி இன்னொரு நாட்டு அதிபர்களை அழைத்தது கிடையாது.. ஆனால் பிடன் மிக கோபமாக புடினுக்கு எதிராக விமர்சனம் வைத்து இருக்கிறார்.
உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இரண்டு நாட்டு ராஜாங்க உறவு கிட்டத்தட்ட மொத்தமாக துண்டிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை ஒரு பக்கம் போட்டுள்ளது. இன்னொரு பக்கம் ரஷ்யாவின் எண்ணெய்களை வாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அதோடு ஐநாவில் ஏகப்பட்ட தீர்மானங்கள், உக்ரைனுக்கு ஆயுத, மருத்துவ, பண உதவிகள் என்று அமெரிக்கா ரஷ்யாவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

என்ன சொன்னார்?
இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்க அதிபர் பிடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடினை ஒரு போர் குற்றவாளி என்று அமெரிக்க அதிபர் பிடன் விமர்சனம் செய்துள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது , செய்தியாளர் ஒருவர்.. பிடனிடம்... புடினை நீங்கள் போர் குற்றவாளி என்று கருதுகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பிடன் நோ என்று கூறினார்.

மாற்றினார்
ஆனால் சில நிமிடங்களில் தன்னுடைய பதிலை பிடன் உடனடியாக மாற்றினார். அதில்.. நான் இந்த கேள்விக்கு பதில் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?.. என்னை கேட்டால் புடினை நான் போர் குற்றவாளி என்றுதான் கூறுவேன் என்று பிடன் பதில் அளித்தார். இதையடுத்து வெள்ளை மாளிகை இது தொடர்பாக விளக்கம் அளித்தது. அதில், பிடன் தன்னுடைய மனதில் பட்டத்தை சொல்லி இருக்கிறார்.

போர் குற்றவாளி
புடின் ஒரு போர் குற்றவாளி என்பதை ஆழ் மனதில் இருந்து பிடன் சொல்லி இருக்கிறார். உக்ரைன் போரில் நடந்த விஷயங்களை, புகைப்படங்களை எல்லாம் பார்த்துவிட்டு பிடன் இதை தெரிவித்து இருக்கிறார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உக்ரைனில் ரஷ்யா மருத்துவமனைகளை தாக்குவதாக புகார் வைக்கப்பட்டது. அதேபோல் பொது மக்கள் இருக்கும் இடங்களில் vaccum குண்டுகளை ரஷ்யா பயன்படுத்துவதாகவும் புகார் வைக்கப்பட்டது. இது தொடர்பான அமென்ஸ்ட்டி அமைப்பும், சர்வதேச நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது.
Recommended Video

ரஷ்யா எதிர்ப்பு
இந்த நிலையில்தான் பிடன் தற்போது புடினை போர் குற்றவாளி என்று அறிவித்து இருக்கிறார். ரஷ்யா அதிபர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொ இதை கடுமையாக எதிர்த்து உள்ளார். அதில், பிடன் சொன்னது மிக மிக தவறு. அவர் பேசியது மன்னிக்க முடியாத தவறான கருத்து. ஒரு நாட்டின் தலைவர் இப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் நாட்டின் குண்டுகள் பல நாடுகளில், பல்லாயிரம் பேரை உலகம் முழுக்க கொன்றுள்ளது என்பதை மறக்க வேண்டாம், என்று அவர் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications