நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த பக்கம் சீனா, ரஷ்யா, ஈரான்.. அந்த பக்கம் அமெரிக்கா, சவுதி.. பெரும் மோதல்.. 3ம் உலகப்போர் வருமா?

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால், பெரும்பாலும், ஈரான் உடன் சீனா மற்றும் ரஷ்யா கைகோர்க்கும் என்று கூறுகிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    முற்றும் அமெரிக்கா ஈரான் மோதல்... மூன்றாம் உலக போர் வெடிக்குமா ?

    நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால், பெரும்பாலும், ஈரான் உடன் சீனா மற்றும் ரஷ்யா கைகோர்க்கும் என்று கூறுகிறார்கள். இதனால் மூன்றாம் உலகப் போர் உருவாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனித்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஈரான் மீது அமெரிக்க டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. முதற் கட்டமாக ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீதும், ஈரான் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 14 முக்கிய ஈரான் தலைவர்கள் பலியாகி உள்ளனர்.அங்கு நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு போர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள்.. சீனா திட்டம்.. அதிகாரி பகீர் தகவல் இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள்.. சீனா திட்டம்.. அதிகாரி பகீர் தகவல்

     என்ன கண்டிப்பு

    என்ன கண்டிப்பு

    இந்த தாக்குதலை ஏற்கனவே ரஷ்யாவும், சீனாவும் கண்டித்து இருந்தது. அமெரிக்காவின் தாக்குதல் விதிகளுக்கு புறம்பானது. இது பெரிய அளவில் பிரச்சனையை உண்டாக்கும். அமெரிக்கா உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும், என்று சீனா, ரஷ்யா இரண்டு நாடுகளும் குறிப்பிட்டு இருந்தது.

    என்ன நிலைப்பாடு

    என்ன நிலைப்பாடு

    அதேபோல் ஒருவேளை ஈரான் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது பெரிய சண்டைக்கு வழி வகுக்கும். ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து அமெரிக்காவையும், சவுதியையும் தாக்க நினைக்கும். இது கண்டிப்பாக பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

    எதிரே யாரும்

    எதிரே யாரும்

    ஒருவேளை சீனா, ரஷ்யா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் கைகோர்த்தால், இன்னொரு பக்கம் அமெரிக்கா, துருக்கி, சவுதி, சிரியாயின் போராளி படைகள் ஆகிய நாடுகள் ஒன்றாக சேரும் என்று கூறுகிறார்கள்.இவர்கள் மோதினால் மற்ற உலக நாடுகளும் சண்டையில் கைகோர்க்கும். இது சன்னி - ஷியா நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையாகவும் மாறும்.

    தடையை மதிக்கவில்லை

    தடையை மதிக்கவில்லை

    ஏற்கனவே ஈரான் மீது பொருளாதார தடை விதித்த போது அதை சீனா மதிக்கவில்லை. கடைசியில் அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்த பின்தான் சீனா அந்த தடையை மதித்தது. ஆனால் ஈரான் மீதான தடையை இப்போது ரஷ்யா பெரிதாக கண்டுகொள்வது கிடையாது.

    வர்த்தக யுத்தம்

    வர்த்தக யுத்தம்

    அதேபோல் ஒரு பக்கம் சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக யுத்தமும் நடந்து வருகிறது.அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா தொடர்ந்து வரியை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும் சீனாவின் பொருட்களுக்கு விலையை உயர்த்தி சண்டையை தொடர்ந்து வருகிறது. இது போருக்கு உரம் போடும் என்றும் கூறுகிறார்கள்.

    என்ன உறவு

    என்ன உறவு

    இன்னொரு பக்கம் சீனா, வடகிழக்கு நாட்டில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முயல்கிறது. சீனாவும், ஈரானும் வடகிழக்கு நாடுகளை கட்டுப்படுத்த முயன்று வருகிறது. அதற்கு இந்த போர் ஒரு வகையில் உதவும், ஈரான் மூலம் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தலாம் என்று சீனாவும், ரஷ்யாவும் நம்புகிறது.

    சீனா கவலை

    சீனா கவலை

    அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளை கட்டுப்படுத்தினால் , எண்ணெய் வர்த்தகத்தை தனது கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று சீனா நம்புகிறது. இதனால் மூன்றாம் உலகப்போருக்கான சூழ்நிலைகள் பிரகாசமாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒரே ஒரு முடிவு உலக அரசியல் மாற்றும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

    English summary
    China and Russia will take stand against the USA in its fight with Iran and Iraq.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X