நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மர்ம நபர் அளித்த டிப்ஸ்.. மூட்டையில் இருந்த 17 பிணங்கள்.. அமெரிக்காவில் தொடரும் கொரோனா கொடூரம்!

அமெரிக்காவில் நர்சிங் ஹோம் ஒன்றில் மூட்டையில் 17 பிணங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நர்சிங் ஹோம் ஒன்றில் மூட்டையில் 17 பிணங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த 17 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    பிணங்களை புதைக்க பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற அமெரிக்கா முடிவு?

    அமெரிக்காவில் உள்ள எஸ்சக்ஸ் கவுண்டி பகுதியில் இருக்கும் நர்சிங் ஹோம்களில் மிகப்பெரிய நர்சிங் ஹோம் அதுதான். அண்டோவேர் பகுதியில் இருக்கும் Andover Subacute & Rehab Center Two என்று அழைக்கப்படும் அந்த நர்சிங் ஹோமில் 500க்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு நர்சிங் ஹோம்கள் போல இங்கும் பலர் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த நர்சிங் ஹோம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு வந்த தகவல் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    தகவல் வந்தது

    தகவல் வந்தது

    அதன்படி அந்த நர்ஸிங் ஹோமில் பிணங்கள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. நிறைய பிணங்கள் கார் வைக்கப்படும் ஷெட்டில் வைக்கப்பட்டு உள்ளது. உடனே வந்து சோதனை செய்யுங்கள் என்று மர்ம நபர் ஒருவர் புகார் அளித்து உள்ளார். இதனால் உடனே அங்கு வந்த போலீசார் அந்த நர்சிங் ஹோமில் சோதனை செய்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் கார் ஷெட்டில் பிணங்கள் காணப்படவில்லை.

    உடல்களை மறைத்து வைத்து உள்ளனர்

    உடல்களை மறைத்து வைத்து உள்ளனர்

    அதன்பின் நர்சிங் ஹோம் முழுக்க தீவிரமாக சோதனை செய்தனர். இறுதியில் பின் பக்கம் இருக்கும் அறை ஒன்றில் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 17 பிணங்கள் இப்படி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த உடல்கள் உடனே கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டது. கடைசியில் அனைவருக்கும் இதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    பலருக்கு கொரோனா

    பலருக்கு கொரோனா

    வெறும் 4 உடல்களை மட்டும் வைக்கும் இடத்தில் 17 உடல்களை திணித்து வைத்து உள்ளனர். இந்த நர்சிங் ஹோமில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 76 பேர் பலியாகி உள்ளனர். இந்த நர்சிங் ஹோமிற்கு அடுத்தடுத்து இரண்டு கட்டிடங்கள் உள்ளது. இதில் இருந்து 76 பேர்தான் பலியாகி உள்ளனர். இதில் 26 பேருக்கு மொத்தமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் எப்படி பலியனார்கள் என்றே தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாம் கொரோனா சோதனை செய்யாமலே உடலை புதைத்து இருக்கிறார்கள்.

    மிக மோசம்

    மிக மோசம்

    அங்கு கொரோனா நோயாளிகள் இருக்கும் இடத்தில் வைத்துதான் மற்ற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் யாருக்கு எப்போது கொரோனா பரவும் என்பதையே கணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் 41 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 17 உடல்களில் 2 உடல்கள் அங்கு பணியாற்றிய நர்ஸ்களின் உடல்கள் ஆகும்.

    அமெரிக்கா முழுக்க நிலை

    அமெரிக்கா முழுக்க நிலை

    இந்த நர்சிங் ஹோமின் நிறுவனர் தற்போது தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவில் பல்வேறு நர்சிங் ஹோம்களில் இப்படி மர்ம மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் இந்த ஹோம்கள் மிக மோசமாக திணறுகிறது. இங்கு போதிய மருந்துகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. அமெரிக்கா முழுக்க இப்படித்தான் கொரோனா காரணமாக மர்ம மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

    எப்போது யார்

    எப்போது யார்

    அங்கு எப்போது யார் பலியாவார்கள், யாருக்கு கொரோனா ஏற்படும் என்பதே தெரியாத நிலை உள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக பலர் பலியாகி வருவதால் அங்கு பிணங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இதனால் பொது பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற யோசனை செய்து வருகிறார்கள். முக்கியமாக நியூயார்க்கில் மக்களை புதைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இதனால்தான் அங்கு நர்சிங் ஹோம்களில் உடல்களை புதைக்காமல் அப்படியே அடுக்கி வைத்து இருக்கிறார்கள். கொரோனா காரணமாக பலியானவர்களில் 3500 பேரை நியூயார்க்கில் மட்டும் மருத்துமனையில் ஐஸ் பெட்டிகளுக்கு வைத்து உள்ளனர். வெளியே புதைக்க இடம் இல்லாத காரணத்தால் இந்த உடல்களை புதைக்காமல் வைத்து இருக்கிறார்கள். நியூயார்க்கில் புதைக்க இடம் இல்லாத காரணத்தால் அங்கு அருகே இருக்கும் மாகாணங்களில் உடல்களை புதைக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் நர்சிங் ஹோம் பிணங்களை அப்புறப்படுத்தாமல் இருக்க காரணம் ஆகும்.

    பெரிய தீவு

    பெரிய தீவு

    அமெரிக்கா முழுக்க கொரோனா இப்படித்தான் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. அங்கு இன்னும் கொரோனா தீவிரம் அடையும் என்று கூறுகிறார்கள். இதனால் இப்போதே நியூயார்க்கில் உள்ள ஹார்ட் தீவில் பிணங்களை புதைக்க தொடங்கி உள்ளனர். தினமும் 30-40 பேர் வீதம் இங்கு புதைக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவும் கூட அங்கு பிணங்களை புதைக்க போதிய இடமளிக்காது என்கிறார்கள்.

    English summary
    Coronavirus: 17 bodies affected by COVID-19 found in a Nursing Home after an anonymous call in USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X