நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய எபிசென்டராகும் ரஷ்யா.. வேகமாக உயருகிறது.. உலகம் முழுக்க 2.5 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 3,641,865 பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ரஷ்யாவில் தற்போதுதான் கிராப் உயர தொடங்கி உள்ளது.

Recommended Video

    கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்

    உலகின் மிக மோசமான வைரஸாக கொரோனா வைரஸ் தாக்குதல் உருவெடுத்துள்ளது. உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது. மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 251,973 பேர் பலியாகி உள்ளனர்.

    இதுவரை 1,193,815 பேர் குணமடைந்து உள்ளனர். உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் மெதுவாக பரவி வந்த நாடுகளிலும் கூட வைரஸ் வேகம் எடுத்து உள்ளது.

    ரஷ்யா நிலை

    ரஷ்யா நிலை

    கொரோனா திடீர் என்று அதிகரிக்கும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. ரஷ்யாவில் 3 நாட்களாக தினமும் 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். அங்கு மொத்தமாக 145,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1356 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 10356 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டது. உலகின் புதிய எபிசென்டராக ரஷ்யா உருவெடுக்க தொடங்கி உள்ளது. விரைவில் ரஷ்யா அமெரிக்காவை நெருங்க வாய்ப்புள்ளது.

    அமெரிக்கா நிலை

    அமெரிக்கா நிலை

    உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஆனால் தற்போது அங்கு கொரோனா கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அதிகமாக 1,212,343 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 69723 பேர் பலியாகி உள்ளனர். அங்கு புதிதாக 26000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் 327,374 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். 24944 பேர் பலியாகி உள்ளனர்.

    ஸ்பெயின்

    ஸ்பெயின்

    ஸ்பெயினில் அதிகமாக 248,301 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 25428 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் அதிகமாக 211,938 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 29072 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் இரண்டு நாடுகளிலும் கொரோனா வேகம் வெகுவாக குறைய தொடங்கி உள்ளது . அங்கு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது. அங்கு பலி அடையும் வேகம் குறைய தொடங்கி உள்ளது.

    இங்கிலாந்து

    இங்கிலாந்து

    யுனைட்டட் கிங்டமில் 190,584 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 28734 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 169,462 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 25201 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் 166,152 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 6993 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனி மட்டும்தான் 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பாதித்தும் குறைவான பலி எண்ணிக்கையை கொண்டு இருக்கிறது.

    துருக்கி நிலை

    துருக்கி நிலை

    துருக்கியில் 127,659 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 3461 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 107,844 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 7328 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 98,647 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 6277 பேர் பலியாகி உள்ளனர். மாறாக கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் 82,880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 4633 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Coronavirus: 2.5 Lakhs people died due to COVID-19 all over the world so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X