கொரோனா.. 90 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை.. பல கோடி பேர் வேலை இழப்பார்கள்.. ஐஎம்எப் பகீர் எச்சரிக்கை
நியூயார்க்: கொரோனாவால் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலக பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா காரணமாக 180 நாடுகள் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா என்ற பெரிய பொருளாதார நாடுகள் எல்லாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 1,790,564 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் உலகம் முழுக்க பொருளாதாரமும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. உலகின் பொருளாதார இழப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா நேற்று ஆலோசனை செய்தார். உலகில் 189 நாடுகளின் தலைவர்கள், உலக வங்கி தலைவர்கள், பொருளாதர ஆலோசகர்கள், சில நாடுகளின் வங்கி தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார்.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா அளித்துள்ள பேட்டியில் , கொரோனா காரணமாக உலகின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்லும். கிரேட் டிப்ரஷன் என்று அழைக்கப்பட்ட 1930 பொருளாதார சரிவை விட மோசமான பொருளாதார சரிவை நாம் சந்திக்க போகிறோம். உலகில் முக்கியமான வறுமையான நாடுகள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க போகிறது. 90 வருடங்களில் இல்லாத பொருளாதார சரிவை நாம் சந்திக்க போகிறோம்.

விரைவில் அறிக்கை வெளியிடுவோம்
வரும் செவ்வாய் கிழமை இது தொடர்பான அறிக்கையை வெளியிடுவோம். கொரோனா காரணமாக எப்படி உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இதில் விவரங்கள் இடம்பெற்று இருக்கும். முதலில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் 160 நாடுகள் வேகமாக முன்னேறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. உலகின் முக்கியமான 170 நாடுகள் மிக மோசமான பொருளாதார சரிவை சந்திக்க போகிறது.

ஆசிய நாடுகள் பாதிக்கும்
முக்கியமாக ஆப்ரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசியா ஆகிய கண்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க போகிறது. இதனால் உலகம் முழுக்க பல கோடி பேர் வேலை இழப்பார்கள். பல கோடி பேர் பல நாடுகளில் வேலை இழக்கும் நிலை ஏற்படும். மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை உலகம் முழுக்க ஏற்படும். 2020 மிக மோசமாக இருக்க போகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்
இரண்டாம் உலகப்போருக்கு பின் மிக மோசமான நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். இப்போதே எங்களிடம் 90+ நாடுகள் அவசர உதவி வேண்டும் என்று கேட்க தொடங்கி உள்ளது. கொரோனா இப்போதே நின்றால் கூட அதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும். அடுத்த வருடம் பாதி வரை கூட இந்த பாதிப்பு இருக்கும். இப்போதே உலகம் முழுக்க தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மொத்தம் 330 கோடி மக்கள் வேலை இழந்து உள்ளனர். இன்னும் மோசமான நிலை வரும் நாட்களில் வரும் என்று கிரிஸ்டலினா ஜார்ஜிவா குறிப்பிட்டுள்ளார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications