நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏதோ காரணத்தோடுதான் செய்துள்ளனர்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. சீனாவிற்கு சவால் விடும் டிரம்ப்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா வேண்டும் என்றே ஏதோ ஒரு காரணத்தோடு மறைத்து இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Coronavirus is not originated from the lab says WHO replies to USA

    கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கடுமையான சண்டை வந்துள்ளது. ஒரு பக்கம் தென் சீன கடல் பகுதியில் இரண்டு நாடுகளும் போரில் ஈடுபடுவதற்கு தயாராக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அங்கு சண்டை தீவிரம் அடையலாம்.

    இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது குற்றச்சாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று இது தொடர்பாக டிரம்ப் முக்கிய விஷயங்களை வெளியிட்டார்.

    அடுத்தடுத்த தெருக்கள்.. ஒரே குடும்பங்கள்.. சென்னையில் அதிகரிக்கும் கிளஸ்டர் பரவல்.. தொடரும் சிக்கல்!அடுத்தடுத்த தெருக்கள்.. ஒரே குடும்பங்கள்.. சென்னையில் அதிகரிக்கும் கிளஸ்டர் பரவல்.. தொடரும் சிக்கல்!

    அதிபர் டிரம்ப் பேட்டி

    அதிபர் டிரம்ப் பேட்டி

    அதிபர் டிரம்ப் தனது பேட்டியில், கொரோனா வைரஸ் மிக மோசமான விஷயம். நம்முடைய நாட்டில் ஏற்பட்ட மோசமான விஷயம் இது. இது சீனாவில் இருந்து வந்து இருக்கிறது. இதை சீனா நினைத்து இருந்தால் நிறுத்தி இருக்கலாம். வைரஸ் உருவான போதே, சீனா இந்த வைரஸ் பரவலை தடுத்து இருக்கலாம். ஆனால் சீனா வேண்டும் என்றே அதை செய்யவில்லை. வைரஸ் பரவியதையும் அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை.

    சீனா தவறு

    சீனா தவறு

    அவர்கள் வேண்டும் என்றே எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளனர். அவர்களுக்கு இந்த வைரஸை எதிர்க்கும் திறன் இல்லை என்று கூறலாம், அல்லது எல்லோரும் தெரிந்தும் ஏதாவது ஒரு காரணத்துக்காக உலகிடம் பொய் சொல்லி இருக்கலாம். நாங்கள் அதை கண்டுபிடிப்போம். நான் அதை கண்டுபிடிப்பேன். இதற்கான உண்மையான காரணம் விரைவில் தெரியும்.

    சீனா வேடிக்கை பார்த்தது

    சீனா வேடிக்கை பார்த்தது

    உலகம் முழுக்க வைரஸை அனுப்பிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த வைரஸ் பெரிய பிரச்சனை இல்லை என்று பொய்யாக பேசி, உலக நாடுகளுக்கு அவர்கள் பொய்யான நம்பிக்கையை கொடுத்தனர். இதற்கான கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள். இது செஸ் போன்ற ஒரு கேம். நாம் ஒரு கடுமையான விளையாட்டை விளையாண்டு கொண்டு இருக்கிறோம். மிக மோசமான விளையாட்டு இது.

    உலக நாடுகள் போட்ட திட்டம்

    உலக நாடுகள் போட்ட திட்டம்

    பல வருடமாக நம்மை அசைத்து பார்க்க உலக நாடுகள் முயன்றது. ஆனால் நாம் நிலையாக நின்றோம். இப்போது இந்த வைரஸ் நம்மை அசைக்க முயல்கிறது. ஆனால் நாம் சிறப்பாக போராடி வருகிறோம். நாம் நிறைய பணத்தை செலவு செய்துவிட்டோம். சீனாவும் இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வகையில் மோசமான விஷயம்தான் .

    கடுமையான விளைவு

    கடுமையான விளைவு

    ஆனால் என்ன சிக்கல் என்றால் அவர்கள் நம்மையும் அவர்களுடன் அழைத்து செல்கிறார்கள். நம்மையும் மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளிவிட்டனர். இதற்கான விளைவுகளை சீனா சந்திக்கும். வர்த்தக ரீதியான நடவடிக்கையை சீனா மீது எடுப்போம். சீன பொருட்களுக்கு கூடுதல் வரியை விதைப்போம், என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் மீண்டும் வர்த்தக போர் மூளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Coronavirus: China did this for a reason, Will find soon says, US President Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X