அந்த ஒரு மீட்டிங்.. கொரோனா மெமோ.. அமெரிக்காவின் முக்கிய 'தலைகளுக்கு' புது சிக்கல்.. என்ன நடக்குமோ?
அமெரிக்காவில் நடந்த உயர்மட்ட மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த உயர்மட்ட மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
உலகில் மொத்தம் 80 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 3285 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 95481 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அமெரிக்கா எப்படி
உலகம் முழுக்க இப்படி கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அமெரிக்காவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 80 பேர் வரை இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு மொத்தம் 11 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர். 9 பேர் இதில் வாஷிங்டனை சேர்ந்தவர்கள். ஒருவர் கலிபோர்னியாவையும், நியுயார்க்கையும் சேர்ந்தவர்கள்.

ஏஐபிஏசி
இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் ஏஐபிஏசி மீட்டிங் நடைபெற்றது. அமெரிக்காவில் அவ்வப்போது நடத்தப்படும் மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஆகும் இது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்டு இதில் முக்கிய ஆலோசனைகளை செய்வார்கள். இஸ்ரேலை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், அமெரிக்க காங்கிரஸ் அவை உறுப்பினர்கள், எம்பிக்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

நேற்று என்ன
இந்த நிலையில் நேற்று இந்த மீட்டிங் நடந்தது. சுமார் இரண்டு மணி நேரம் இவர்கள் ஆலோசனை செய்தனர். அமெரிக்காவின் அரசியலில் முக்கியமாக பார்க்கப்படும் அதிகாரிகள் , எம்பிக்கள் இதில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் 8 பேர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது என்று மெமோ அனுப்பட்டுள்ளது. இந்த மீட்டிங் வாஷிங்டனில் நடந்தது.

எப்படி நடந்தது
இந்த மீட்டிங் நடந்த இடத்தை சுற்றி பல இடங்களில் உள்ள குடியிருப்புகளில் கொரோனா பரவி உள்ளது. அதனால் இங்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதோடு, இந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட இஸ்ரேல் அதிகாரிகள் சிலருக்கும், அமெரிக்க எம்பிக்கள் சிலருக்கும் கொரோனா தாக்கி இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் இன்று சோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க திருப்பம்
அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜனநாயக கட்சி இப்போதுதான் வேட்பாளரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதனால் பொது இடங்களில் பெரிய அளவில் பிரச்சார கூட்டங்கள் நடந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா காரணமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் வெளியே கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications