"மிகப்பெரிய அச்சுறுத்தல்".. அமெரிக்காவை நடுங்க வைக்கும் டெல்டா கொரோனா.. பிடனுக்கு பறந்த எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் பரவ தொடங்கி உள்ள டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Delta + ஆக உருமாற்றம் அடைந்தது Delta வகை Coronavirus.. எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் ?

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பல்வேறு மியூட்டன்ட் வைரஸ்களாக உருமாறி பரவிக்கொண்டு இருக்கிறது. சீனாவில் பரவ தொடங்கிய வைரஸ் தற்போது பல்வேறு முறை உருமாற்றம் அடைந்து புது வேரியன்ட்கள் பல உலகம் முழுக்க பரவிக்கொண்டு இருக்கிறது.

    இதில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா இன்னும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த டெல்டா வகை கொரோனா டெல்டா + வகை கொரோனாவாகவும் உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்டா

    டெல்டா

    டெல்டா வகை கொரோனாவான B.1.617.2 வைரஸ் தற்போது பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. பிரிட்டனில் டெல்டா வகை கொரோனாவால் தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது பரவும் கொரோனா கேஸ்களில் 90% கேஸ்கள் டெல்டா வகையாகும். அங்கு முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை டெல்டா முந்தியுள்ளது.

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் அமெரிக்காவில் பரவ தொடங்கி உள்ள டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்டா வகை கொரோனா மிகவும் ஆபத்தாக உள்ளது. அமெரிக்கா மொத்தமாக கொரோனாவில் இருந்து மீளும் முயற்சியில் உள்ளது.

    ஆனால்

    ஆனால்

    ஆனால் டெல்டா வகை கொரோனா காரணமாக அமெரிக்காவின் முயற்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்படும் புதிய கொரோனா கேஸ்களில் 20% கேஸ்கள் டெல்டா வகை கொரோனா இதுதான் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு வாரம் முன் புதிய டெல்டா வகை கேஸ்களின் சதவிகிதம் 10% ஆக மட்டுமே இருந்தது.

    அதிகரித்துள்ளது

    அதிகரித்துள்ளது

    தற்போது அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வேகம் எடுத்துள்ளது. பிரிட்டனை இப்படித்தான் வேகமாக டெல்டா வகை பரவியது. ஆனால் ஒரே நல்ல விஷயம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வேக்சின்கள் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக திறன் கொண்டது. வேக்சின் திறன் கொண்டதாக இருப்பதால் ஆபத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.

    வேக்சின்

    வேக்சின்

    வேக்சினை வேகமாக செலுத்துவதன் மூலம் நாம் டெல்டா வகை கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். டெல்டா வகை கொரோனாவின் இரட்டிப்பு ஆகும் நேரம் துரிதமாக உள்ளது. மே 8ல் 1.2 என்ற அளவில் இருந்த டெல்டா வகை கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 2 நாட்களுக்கு முன் 20.6% ஆக உயர்ந்துள்ளது.

    உயர்ந்தது

    உயர்ந்தது

    இதுதான் கவலை அளிக்கிறது. ஆனால் ஃபைசர் வேக்சின் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக 88% எதிர்ப்பு கொண்டது .அதேபோல் ஃபைசர் வேக்சின் ஆல்பா கொரோனாவிற்கு எதிராக 93% எதிர்ப்பு கொண்டது. இதனால் விரைவில் வேக்சின் செலுத்துவதை அமெரிக்க அதிபர் பிடன் துரிதப்படுத்த வேண்டும் என்று பவுச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+