நன்றாக இருக்கிறேன்.. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு!
நியூயார்க்: நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு தடுப்பாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா உலகம் முழுக்க தீவிரமாக பரவி வந்த நிலையில் அதற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பலன் அளிக்குமா என்று கேள்வி எழுந்தது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும்.
இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக தீவிரமாக பிரபலப்படுத்தி வந்தார். அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தும் பயன்படுத்தப்பட்டது. மேலும் டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக தான் உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

என்ன பேட்டி
இது தொடர்பாக டிரம்ப் கடந்த வாரம் அளித்த பேட்டியில் நான் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கடந்த ஒன்றரை வாரமாக சாப்பிடுகிறேன். நான் தினமும் இந்த மருந்தை சாப்பிடுகிறேன். இதோடு சின்க் மருந்தை சேர்த்து சாப்பிடுகிறேன். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து நன்மை பயக்கும். அது தொடர்பாக நான் நிறைய நல்ல விஷயங்களை கேட்டு இருக்கிறேன். அமெரிக்காவில் பலர் இந்த மருந்தை உட்கொள்கிறார்கள், என்றார் .

இனி இல்லை
இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது டிரம்ப் புதிய கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மறுத்து சாப்பிடுவதை நிறுத்தி உள்ளேன். இரண்டு வாரம் இந்த மருந்தை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அந்த கால அவகாசம் முடிந்துள்ளது. இதனால் இந்த மருந்தை எடுப்பதை நிறுத்தி இருக்கிறேன். இதனால் எனக்கு எந்த விதமான பக்க விளைவும் வரவில்லை. பார்க்கும் உங்களுக்கே அது தெரியும்.

தவறு இல்லை
இதை பற்றி சிலர் தவறாக எழுதினார்கள். ஆனால் நான் இப்போது நன்றாக இருக்கிறேன். நான் இப்போதும் இங்குதான் உங்கள் முன் இருக்கிறேன். வெள்ளை மாளிகையில் சிலருக்கு கொரோனா இருந்தது. அதனால் நான் இந்த மருந்தை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் இந்த மருந்தை நான் எடுத்தேன், என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.

தடை செய்ய முடிவு
அவர் இந்த மருந்தை நிறுத்துவதாக கூறிய சில மணி நேரங்களில் உலக சுகாதார மையம் இதன் பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மலேரியாவிற்கு எதிராக மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications