டிரம்ப் கொடுத்த வாக்கு.. கடைசியில் பெரும் ஏமாற்றம்.. அமெரிக்காவும் விலக்கல்ல.. கொரோனா தாண்டவம்!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. விரைவில் இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டுவிடும் என்கிறார்கள்.

Recommended Video

    Coronavirus spreads in 7 Middle East Countries

    கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டை முடக்கி போட்டுள்ளது. உலகம் முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

    சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. இப்போதுதான் இந்த வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இது நினைத்ததை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3000 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க உள்ள பலி எண்ணிக்கை ஆகும் இது. சீனாவில் மட்டும் 2900 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 88000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 9000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

    விரைவில்

    விரைவில்

    இந்த வைரஸ் தாக்குதல் இந்த வாரம் 1 லட்சம் பேரை கண்டிப்பாக தாக்கும் என்று கூறியுள்ளனர். பெரும்பாலும் நாளையே இந்த வைரஸ் 1 லட்சம் பேரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 62 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் வைரஸ் தாக்கியுள்ளது. தென் கொரியாவில் மொத்தம் 4000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. நேற்று அங்கு புதிதாக 500 பேருக்கு வைரஸ் தாக்கியது.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு நியூயார்க்கில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் இந்த வைரஸ் தாக்குதலால் இரண்டாவது நபர் பலியாகி இருக்கிறார். நேற்று ஒருவர், இன்று அதிகாலை ஒருவர் என்று இரண்டு பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இல்லை. இதை உள்ளே அனுமதிக்க மாட்டோம். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் அவரின் நம்பிக்கைக்கு மாறாக அமெரிக்காவிலும் கொரோனா பரவி உள்ளது.

    வல்லரசு நாடுகள்

    வல்லரசு நாடுகள்

    உலகம் முழுக்க வல்லரசு நாடுகளைத்தான் இந்த வைரஸ் தீவிரமாக தாக்கி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய வல்லரசு நாடுகள் எல்லாம் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தம் 8 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது.சிங்கப்பூரில் புதிதாக நேற்று 4 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+