24 மணி நேரத்தில் 230,370 கேஸ்கள்.. உலகை உலுக்கிய கொரோனா வைரஸ்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி இருப்பதாகவும், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக கேஸ்கள் வந்து இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது 8 மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது.

Coronavirus: Total cases in World reaches 13,036,550 cases, World sees 2.3 Lakhs cases yesterday

உலகம் முழுக்க தற்போது மொத்தமாக 13,036,550 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 571,574 பேர் பலியாகி உள்ளனர். 7,582,091 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமாக 230,370 கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை பதிவானதில் இதுதான் ஒரே நாளில் பதிவான அதிக கேஸ்கள் ஆகும்.

உலகில் அமெரிக்காவில்தான் அதிகமாக மக்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மொத்தமாக 3413995 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 571574 பேர் பலியாகி உள்ளனர் . அங்கு மொத்தமாக 1759129 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.

பிரேசிலில் மொத்தமாக 1866176 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 72151 பேர் பலியாகி உள்ளனர் . அங்கு மொத்தமாக 580513 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.

மூன்றாவதாக இந்தியாவில் மொத்தமாக 879466 கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 23187 பேர் பலியாகி உள்ளனர் . அங்கு மொத்தமாக 301850 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. நான்காவதாக ரஷ்யாவில் மொத்தமாக 727162 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 11335 பேர் பலியாகி உள்ளனர் . அங்கு மொத்தமாக 214766 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.

இதனால் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக கேஸ்கள் வந்து இருக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+