அமெரிக்காவுடன் இணைந்த ஆஸி, மலேசியா, வியட்நாம்.. சீனாவை வளைத்த 4 நாட்டு போர் கப்பல்கள்.. பதற்றம்!

கொரோனா காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சீனாவை சுற்றி நான்கு நாட்டு போர் கப்பல்கள் ரோந்து பணிகளை செய்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: கொரோனா காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சீனாவை சுற்றி நான்கு நாட்டு போர் கப்பல்கள் ரோந்து பணிகளை செய்து வருகிறது.

Recommended Video

    சீன கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா போர் கப்பல்கள்

    கொரோனா காரணமாக உலகே ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்த கொரோனா பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையே பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையில் கடுமையான பிரச்சனைகள் உருவாகி உள்ளது.

    கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதை விரைவில் விசாரிக்க போவதாக சீனா அறிவித்துள்ளது. இதனால் சீனா அமெரிக்கா இடையிலான சண்டை விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.

    பல வருட சண்டை

    பல வருட சண்டை

    இந்த நிலையில் இன்னொரு பக்கம் புதிய சண்டை நடந்து வருகிறது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை நடந்து வருகிறது. இது பல வருட சண்டை ஆகும். இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது.

    தட்டி வைத்தது

    தட்டி வைத்தது

    இத்தனை நாட்கள் இந்த கடல் எல்லையில் எல்லா மீறிய போதெல்லாம் அமெரிக்கா சீனாவை தட்டி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தென் சீன கடல் எல்லையில் பெரிய அளவில் எதுவும் பதற்றம் வந்தது இல்லை. இந்த நிலையில் முதல் முறையாக தென் சீன கடல் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த கடல் எல்லைக்குள் சீனாவின் Haiyang Dizhi போர் கப்பல்கள் சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    நான்கு நாட்டு கப்பல்

    நான்கு நாட்டு கப்பல்

    இந்த விஷயம் தெரிந்ததும் அமெரிக்கா தனது USS Bunker Hill மற்றும் USS Barry எனப்படும் போர் கப்பல்களை சீன எல்லைக்கு அனுப்பி வைத்தது. அதோடு அமெரிக்காவுடன் மலேசியாவின் போர் கப்பல்களும் கூட்டு சேர்ந்தது. பின் வியட்நாம் போர் கப்பலும் அமெரிக்காவுடன் சேர்ந்து தற்போது அங்கே ரோந்து பணிகளை கவனித்து வருகிறது. தற்போது அமெரிக்க கப்பலுடன் ஆஸ்திரேலியாவின் போர் கப்பலும் இணைந்துள்ளது.

    ஆஸ்திரேலிய போர் கப்பல்

    ஆஸ்திரேலிய போர் கப்பல்

    தற்போது அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான சக்தி வாய்ந்த போர் கப்பலும் இணைந்துள்ளது. ஆஸ்திரேலிய போர் கப்பலுக்கு இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ஆனாலும் இந்த கடல் எல்லை ஆஸ்திரேலியாவிற்கு முக்கியம் கிடையாது. ஆனாலும் அமெரிக்காவிற்கு ஆஸ்திரேலியா உதவ காரணம் இருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிறுவனங்கள் சிலவற்றை சீனா வாங்கியுள்ளது.

    செம கோபம்

    செம கோபம்

    இதனால் சீனா மீது ஆஸ்திரேலியா செம கோபத்தில் இருக்கிறது. இதற்கு எதிராக ஆஸ்திரேலியா சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சீனாவை அடக்கும் விதமாக அமெரிக்காவிற்கு உதவ ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் இரண்டு போர் கப்பல்கள் சீனாவிற்கு எதிராக களமிறக்கி உள்ளது. சீனாவை சுற்றி இப்படி நான்கு நாட்டு போர் கப்பல்கள் ரோந்து செல்வது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+