உலகமே அழிய போகுது.. எல்லாருமே சாக போறோம்.. "இரவு" என்பதே இனி பூமியில் இருக்காது.. பாபா வாங்கா பகீர்
நியூயார்க்: இன்னும் இந்த வருடம் முடிய ஒருசில நாட்களே உள்ள நிலையில், 2024-ம் ஆண்டுக்கான கணிப்புகள் இப்போதே வெடித்து கிளம்பிவிட்டன.. இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று கலங்கி உள்ளனர் மக்கள்.
பாபா வாங்கே - இவர் பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்படுகிறார்.

யார் இவர்: காரணம், 12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் மேல் பலித்திருக்கிறது. அவைகளில் பல சம்பவங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்து வருகின்றன.
2024ம் ஆண்டில் என்ன நடக்க போகிறது என்பது குறித்தும் பாபா வாங்கா கணித்து வைத்திருக்கிறாராம்.. 2 மாதங்களுக்கு முன்பு, இதுகுறித்த சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
பேரழிவுகள்: அதன்படி, "2024 க்கான தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ, வெள்ளம் போன்ற பேரழிவுகள் வரப்போகிறது.. புற்றுநோய்க்கான தீர்வு 2024ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும்.. ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. 2024ல் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்..
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2024ம் ஆண்டில் தன்னுடைய சொந்த நாட்டை சேர்ந்த ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவார்.. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார்.. அது அவரை காது கேளாதவர் ஆக்கும்.. மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றெல்லாம் பாபா வாங்காவின் கணிப்புகளை கேட்டு உலக மக்கள் அதிர்ந்து போனார்கள்.
கணிப்புகள்: இப்போது, பாபா வாங்கா கணித்ததாக, மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024 ம் ஆண்டில், ரஷ்ய அதிபர் புதின் படுகொலை செய்யப்படலாம். அதுவும் அந்நாட்டு மக்கள் சதி செய்து அவரை படுகொலை செய்யலாம் என்று கணித்துள்ளார் வாங்கா.
புற்றுநோயால் பலபேர் மரணித்து வரும்நிலையில், இந்த கொடிய புற்றுநோய்க்கான மருந்து 2024 ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்படும்.. இந்த புற்றுநோய் மருந்தால் உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட போகிறது.. 2024ம் ஆண்டில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்..
ஆயுதங்கள்: வரும் ஆண்டில், ஒரு உயிரியல் ஆயுதங்களை உலகின் மிகப்பெரிய நாடு சோதனை செய்யக்கூடும். இந்த மாதிரியான சோதனை எங்கு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்த விஷயம் நடக்க வாய்ப்புள்ளதாக பாபா வாங்கா பதிவு செய்துள்ளார். 2024 ம் ஆண்டில் உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும்.. ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பல முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்து ஹேக் செய்வார்கள்..
வரும் ஆண்டில் உலகம் காலநிலை தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.. பூகம்பம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படும்" என்று கணித்துள்ளாராம் பாபா வாங்கா.
தாக்குதல்கள்: ஆக, உயிரியல் தாக்குதல், பொருளாதார சிக்கல், காலநிலை அழிவு போன்ற மிகப்பெரிய அபாயங்கள் வரும் ஆண்டில் ஏற்பட உள்ளதாக வாங்கா கணித்துள்ளதால், ஒருவித கலக்கம் மக்களிடம் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, வரும் ஆண்டுகளில் இவர் கணித்து வைத்திருக்கும் மற்ற கணிப்புகளும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
அதன்படி, 5079ம் ஆண்டு, இந்த ஒட்டுமொத்த உலகமுமே அழிந்துவிடுமாம்.. இந்த 5079 ஆண்டுவரைதான், ஆண்டுக்கு 6 கணிப்பு வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் கணிப்புகளை எழுதிவைத்திருக்கிறார்.
அழிவு: அதன்படி, வரும் 2028ம் ஆண்டு, வீனஸ் கிரகத்துக்கு மக்கள் செல்வார்களாம்.. 2046-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்களாம்.. 2100 ஆண்டுக்கு பிறகு, செயற்கைசூரியஒளி உருவாக்கப்பட்டு, இனிமேல் இரவு என்பதே பூமியில் இருக்காதாம்.. இதெல்லாம் பாபா வாங்காவின் அதிசயத்தக்க கணிப்புகளாக கருதப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications