நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதயம் கனக்கிறது.. இனி எப்படி இருப்பேன்?.. சகோதரர் ராபர்ட் டிரம்ப் மரணம்.. அதிபர் டிரம்ப் உருக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல்நலக்குறைவு காரண்மாக இன்று நியூயார்க்கில் காலமானார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல்நலக்குறைவு காரண்மாக இன்று நியூயார்க்கில் காலமானார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அடுத்த அதிபர் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர், அமெரிக்காவில் அதிக சக்தி வாய்ந்த கோடிஸ்வரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். டிரம்ப் உடன் பல இடங்களில் அடையாளம் காணப்பட்ட நபர்தான் அவரின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப்.

அதிபர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்பட்ட ராபர்ட், தனது அண்ணன் போலவே சர்ச்சைகளின் நாயகன்.

எல்லை பிரச்சனையில்.. எப்போதும் இந்தியாவுடன் உடன் நிற்பேன்.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் பைடன் அதிரடி எல்லை பிரச்சனையில்.. எப்போதும் இந்தியாவுடன் உடன் நிற்பேன்.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் பைடன் அதிரடி

சட்ட போராட்டம்

சட்ட போராட்டம்

தனது அண்ணனுக்காக அடிக்கடி சட்ட போராட்டங்களை இவர் மேற்கொண்டு இருக்கிறார். டிரம்ப் டவர்ஸ் சார்பாக பல்வேறு நிறுவனங்கள் மீதும், நியூயார்க் கவர்னர் மீதும் இவர் வழக்கு தொடுத்து இருக்கிறார். டிரம்பிற்க்கு எதிராக வெளியாக உள்ள புத்தகத்தை வெளியிட கூடாது என்றும் இவர் வழக்கு தொடுத்து இருந்தார்.

யார் இவர்

யார் இவர்

டிரம்பின் இடது கை இவர் என்று பார்க்கப்பட்டார். டிரம்ப் மிக மோசமான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது ராபர்ட்தான் அவருக்கு ஆலோசனைகளை வழங்குவார் என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நியூயார்க்கில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ராபர்ட் அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக ராபர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராபர்ட் டிரம்ப், இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவரின் உடலில் என்ன பிரச்சனை என்று கூறப்படவில்லை. இவர் எந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இவரின் மரணம் டிரம்ப்பை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இரங்கல் என்ன சொன்னார்

இரங்கல் என்ன சொன்னார்

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ராபர்ட் எனக்கு சிறந்த நண்பர். அவர் எனக்கு சகோதரர் மட்டும் இல்லை. எனக்கு இதயம் கனக்கிறது. அவரை இனி சந்திக்க முடியாது என்ற செய்தி மனதை உலுக்குகிறது. அவரை சந்திக்காமல் இனி எப்படி இருப்பேன். எப்போதும் உன் நினைவுகளோடு இருப்பேன். உன்னை மிகவும் மிஸ் செய்வேன். ஐ லவ் யூ. உன் ஆன்மா சாந்தி அடையட்டும், என்று டிரம்ப் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

English summary
Donald Trump's brother Robert Trump dies at the age of 71 in New York.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X