இனி சரணடையமாட்டேன்.. அடித்து சொன்ன டொனால்ட் டிரம்ப்! சிறையிலிருந்து வெளிவந்த நிலையில் ஆவேசம்
நியூயார்க்: தேர்தல் முறைகேடு வழக்கில் அட்லாண்டா சிறையில் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி சரணடையப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார். இந்நிலையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக கூடாது என அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், புதிய அதிபர் பதவியேற்பு விழா நடப்பதை தடுக்கவும் ஆங்காங்கு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்ததில் 5 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இப்படியாக ஜார்ஜியா மாகாணத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணை மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின்போதே டிரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டிரம்ப் அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். அமெரிக்க வரலாறு எத்தனையோ அதிபர்களை பார்த்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யார் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவானது கிடையாது.
ஆனால் முதல் முறையாக டிரம்ப் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டிரம்ப் சிறையில் ஆஜரான நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்துக்கொண்டனர். டிரம்ப் அட்லாண்டா சிறையில் சுமார் 20 நிமிடங்கள் வரை இருந்திருக்கிறார். இந்த 20 நிமிடங்களும் அட்லாண்டா பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ரூ.1.6 கோடியை ஜாமீன் தொகையாக கொடுத்து சிறையிலிருந்து ஜாமீன் பெற்றிருக்கிறார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் அவர் நேராக அட்லாண்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அவரது தனி விமானம் மூலம் நியூ ஜெர்சி கோல்ஃப் கிளப்புக்கு சென்று சேர்ந்தார். முன்னதாக இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள டிரம்பம், "அமெரிக்காவுக்கு இது மிகவும் சோகமான நாள்" என்று கூறியுள்ளார். அதேபோல கைது செய்யப்பட்ட பின்னர் போலீசார் எடுத்த படத்தை X சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, "தேர்தல் குறுக்கீடு! ஒருபோதும் சரணடையாதே!" என்று கூறியுள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப், தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நீதிமன்ற வழக்கு மற்றும் சிறை தண்டனை இவரது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல அவரை தேர்தலில் வெற்றி பெற கூடாது என எதிர்க்கட்சிகள் செய்யும் சதிதான் இந்த வழக்குகள் என டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications