இனி பணமெல்லாம் இருக்காது.. வேலை என்பதே காலி ஆகிவிடும்.. எலான் மஸ்க் பயங்கர எச்சரிக்கை.. கவனம்
சென்னை: செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக, அடுத்த இருபது ஆண்டுகளில் பணம் என்பதே இருக்காது.. வேலை என்பது ஒரு விருப்பத் தேர்வாக மாறும் என்று எலான் மஸ்க் கணித்துள்ளார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இதே வேகத்தில் தொடர்ந்தால், வசதியான வாழ்க்கை வாழ பணம் சம்பாதிப்பது அவசியமில்லை என்று எலான் மஸ்க் வலியுறுத்தினார்.
உலகின் பணக்காரரான மஸ்க், வேலை செய்வது என்பது ஹாபி போல மாறிவிடும் அல்லது சொந்தமாக காய்கறி தோட்டம் அமைப்பது போன்ற பொழுதுபோக்கு அம்சமாகிவிடும் என குறிப்பிட்டு உள்ளார். சுமார் 360 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட இவர், எதிர்காலத்தில் பணம் கூட முக்கியத்துவம் இழக்கும் என்றும் கூறினார்.

வேலை என்பது ஒரு விருப்பத் தேர்வாகிவிடும்
வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய மஸ்க், "பத்து முதல் இருபது ஆண்டுகளுக்குள் வேலை என்பது ஒரு விருப்பத் தேர்வாகிவிடும். இது விளையாடுவது போல அல்லது வீடியோ கேம் விளையாடுவது போல இருக்கும்" என்று தெரிவித்தார்.
"நீங்கள் வேலை செய்ய விரும்பினால், அது காய்கறி வாங்குவது போன்றது. கடையில் காய்கறி வாங்குவதற்குப் பதிலாக, உங்கள் வீட்டிலேயே காய்கறி வளர்க்கலாம். தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது கடினம் என்றாலும், சிலர் அதை விரும்பி செய்கிறார்கள். அப்படித்தான் வேலை என்பதும் விருப்பத் தேர்வாக மாறும்" என்றும் அவர் விளக்கினார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இதே வேகத்தில் தொடர்ந்தால், வசதியான வாழ்க்கை வாழ பணம் சம்பாதிப்பது அவசியமில்லை என்று எலான் மஸ்க் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், "அனைவரையும் பணக்காரர்களாக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும் தான். மின்சாரத்திற்கான கட்டுப்பாடுகள் இருக்கும். ஒரு கட்டத்தில் பணம் முக்கியத்துவம் இழந்துவிடும்."
பணம் சம்பாதிப்பது அவசியமில்லை
டெஸ்லா நிறுவனம் ஆப்டிமஸ் அல்லது 'டெஸ்லா பாட்' எனப்படும் மனித உருவ ரோபோக்களை உருவாக்கி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த கோடீஸ்வரர், எதிர்காலத்தில் அனைவரும் இத்தகைய சாதனங்களை வைத்திருப்பார்கள் என்றும், இது வறுமையை ஒழிக்க உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் பொருளாதார வல்லுநர்கள், ரோபோக்களின் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால், இத்தகைய பலன்களை குறுகிய காலத்தில் அடைய முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை ஒன்று பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்திற்கே ஆபத்தாக முடிய கூடிய விஷயம் ஒன்றை பற்றி எலான் மஸ்க் அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவர் சொன்னபடியே தற்போது நடக்க தொடங்கி உள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. அதாவது பிறப்பு விகிதம் குறைந்து மக்கள் தொகை எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க மக்கள் தொகை பிரச்சனை கடந்த சில வருடங்களுக்கு முன் வரை அதிகமாக இருந்தது. மக்கள் தொகை வேகமாக உயர்கிறது என்று புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இப்போது திடீரென மக்கள் தொகை குறைவு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சீனாவில் கூட இரண்டு குழந்தை முறை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது.
சீனாவில் குழந்தைகள்
சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. . மக்கள் தொகை கட்டுப்பாடு அந்த நாட்டின் மனித வள பலத்தை குறைத்தது. அந்த நாட்டிற்கே இது எதிராக திரும்ப தொடங்கியது. ஆம் அங்கு வயதானவர்கள் அதிகமானார்கள். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது.
ஜப்பான் போல சீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் குறைந்து கஷ்டப்படும் நிலைக்கு சென்றது. இதையடுத்து சீனா புதிய குடும்ப கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வந்தது. அதேபோல் ரஷ்யாவும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 10 குழந்தைகளை பெற்றுக்கொண்டால்.. கடைசி குழந்தைக்கு 14 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மக்கள் தொகை வேகமாக குறைவது தற்போது பல நாடுகளுக்கு பிரச்சனை ஆகி உள்ளது. எலான் மஸ்க் இதே பிரச்சனையை சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications