டிரம்ப்பை கட்டம் கட்டிய எஃப்பிஐ அதிகாரிகள்: அணு ஆயுதம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பறிமுதல்
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வீட்டில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரியில் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய நிலையில், அங்கிருந்து அணு ஆயுதங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய முக்கிய கோப்புக்களை எடுத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனர். அமெரிக்க வரலாற்றில் இவ்வாறு முன்னாள் அதிபர் ஒருவரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்காவின் 45வது அதிபராக கடந்த 2017-2021 வரை செயல்பட்ட டொனாட் டிரம்ப் மீது தற்போது உளவு சட்ட மீறல் குறித்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜனவரியில் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் வெளியேறிய நிலையில், அங்கிருந்து அணு ஆயுதங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய முக்கிய கோப்புக்களை எடுத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் அவரது வீடுகளில் FBI அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
சோதனையில் பல்வேறு ரகசிய கோப்புகள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் மீது உளவு சட்டத்தினை மீறியதாக குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. 1917ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த உளவுச் சட்டத்தின்படி (Espionage Act) அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவோ அல்லது வேறு நாட்டின் நலனுக்காகவோ, நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பெறுதல், படங்களைப் பதிவு செய்தல் அல்லது விளக்கங்களை நகலெடுப்பதைத் தடைசெய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டத்தை டிரம்ப் மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் புளோரிடா மாகாணத்தின் பாம் பீச் பகுதியில் உள்ள மர்ரா லாகோ என்ற டிரம்புக்கு சொந்தமான வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து டிரம்பின் வழக்கறிஞர்கள் ஏதும் கூறவில்லை. இந்த ஆவணங்கள் உயர் பாதுகாப்பு தொடர்பானவை என்றும், மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி குறித்தும் இருந்ததாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கூறிய குற்றச்சாட்டுகள் ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை அல்லது, அபராதம் விதிக்கப்படலாம். ஏற்கெனவே கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் டிரம்புக்கு சொந்தமான Mar-a-Lago வீட்டில் FBI அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த புதிய ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், கடந்த சில மாதங்களாக இந்த குற்றச்சாட்டு குறித்த வழக்கில் ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், திடீரென மேற்கொள்ளப்படும் இந்த ரெய்டுகள் தேவையற்றது என கூறியுள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications