மூழ்கும் நிலையில் வணிக சாம்ராஜ்ஜியம்!.. கரை சேருவாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரியல் எஸ்டேட் துறையில் கடன்களை பெறுவதற்காக தனது சொத்துக்களின் மதிப்பை போலியாக உயர்த்தி காட்டியதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்தும் வணிக நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த வழக்கு குறித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்கிறார் டிரம்ப். இதில் வழங்கப்படும் தீர்ப்பு, டிரம்ப் வணிக சாரம்ராஜ்ஜியத்தை கடுமையாக பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

டொனால்ட் டிரம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மட்டும் கிடையாது. அவர் மிகப்பெரிய பணக்காரரும் கூட. அவருக்கு சொந்தமாக ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், ரியல் எஸ்டேட் வணிகம்தான் பிரதானமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வணிகத்தை மேம்படுத்த வங்கிகளில் கடன் கேட்டிருக்கிறார். இதற்காக தன்னிடம் இல்லாத சொத்துக்களை இருப்பதாகவும் அவர் போலி ஆவணங்களை கொடுத்திருக்கிறார். இதுதான் தற்போது பிரச்னையாக வெடித்திருக்கிறது.

Former US President Donald Trump is appearing in court today in connection with business fraud

இதற்கு எதிராக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த முறைகேடு காரணமாக டிரம்ப் ரூ.20 ஆயிரம் கோடியை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்றும், அவர் இனி இந்த வணிகத்தை நடத்தக்கூடாது என்றும் ஜேம்ஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது கிரிமினல் வழக்கு இல்லை என்றாலும், டிரம்பின் வணிக சாம்ராஜ்ஜியத்தை அடியோடு பாதிக்கும். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், தனக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிதான் இந்த வழக்கு என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் டிரம்பின் தலை உருண்டுக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த வழக்கிலும் டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவர் பெரும் இழப்பை சந்திக்க நேரும். அதேபோல எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் அவரது செல்வாக்கை குறைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+