நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பூஸ்டர் டோஸ்".. ஹூ கோரிக்கையை நிராகரித்த இந்த 2 நாடுகள்.. 3வது டோஸ் செலுத்துவோம் என அதிரடி

பூஸ்டர் டோஸ்களை செலுத்த போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

நியூயார்க்: இன்னும் எத்தனையோ ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசிகூட போட முடியாத நிலை உள்ளதால், பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.. ஆனால், தடுப்பூசி பூஸ்டர் டோஸ்களை தாங்கள் செலுத்த போகிறோம் என்று ஜெர்மனியும் பிரான்சும் அதிரடியாக அறிவித்துள்ளன.

உலகம் முழுவதும் தொற்று பரவி உள்ள நிலையில், ஒவ்வொரு அலை பரவலாக வந்து கொண்டிருக்கிறது.. கொரோனாவைரஸ் முதல் அலையைவிட, இரண்டாவது அலையின் தீவிரம் வீர்யமானதாக இருந்தது..

 ஷாக்கடிக்கும் டீன் ஏஜ்.. 3 ஆண்டுகளில் 1.65 லட்சம் பேர் தற்கொலை.. 4வது இடத்தில் தமிழ்நாடு ஷாக்கடிக்கும் டீன் ஏஜ்.. 3 ஆண்டுகளில் 1.65 லட்சம் பேர் தற்கொலை.. 4வது இடத்தில் தமிழ்நாடு

இது லட்சக்கணக்கானோரையும் காவு வாங்கியது. இதனை தொடர்ந்து பல நாடுகளில் 3-வது அலை பரவி வருகிறது.. இந்த நேரத்தில் 4 வது அலையும் வந்து விடும் என்றும் விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள்.

 டெல்டா

டெல்டா

இந்த கொரோனா வைரஸ் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது... டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ், ஆல்பா என இதன் உருமாற்றம் அதிகரிக்கிறது.. இதில் டெல்டா வைரஸ்தான், 2வது அலை பரவலுக்கு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது.

 ஆறுதல்

ஆறுதல்

இதற்கான மருந்தை உலக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்.. இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே நமக்கு உள்ள ஒரே ஆறுதல்.. அதனால், உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. பொதுமக்களும் நிலைமையை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

 தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இந்த வைரஸ் செயல்படுவதால், வயது வித்தியாசம் பாராமல் அனைத்து தரப்புக்குமே தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன... சில நாடுகள் ஒரு டோஸ் தடுப்பூசியை முழுதாக போட்டு முடித்து விட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ் தடுப்பூசி முழுமையாக போட்டு முடித்துவிட்டனர்.. மேலும் சில நாடுகளில் 2 டோஸ்களையுமே முடித்துவிட்டு, 3வது தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர்.

 தடுமாற்றம்

தடுமாற்றம்

ஆனால், வறுமையில் உள்ள ஒரு சில நாடுகளால், தங்கள் மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடவே தடுமாற்றமாக இருக்கிறது.. எனவே, தடுப்பூசி போடுவதில் உலக நாடுகளுக்குள் ஒற்றுமையில்லை என்றும், சமத்துவம் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் பூஸ்டர் டோஸ் என்ற விவகாரம் கிளம்பி உள்ளது.. அதாவது 2 டோஸ் போட்டுக் கொண்டு, 3வது டோஸ் போட்டுக் கொள்வதற்குதான் பூஸ்டர் டோஸ் என்று பெயர்..

 உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

இந்த பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்வதை உலக சுகாதார அமைப்பு விரும்பவில்லை.. காரணம், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கொரோனாவை தடுப்பதில் பயன் தருமா என்று இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.. அதேசமயம், பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தினால் ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடுவதற்கு அது உதவும் என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.. ஏற்கனவே தடுப்பூசியில் சமத்துவம் இல்லாத சூழலில், இதை நிவர்த்தி செய்ய குறைந்தபட்சம் செப்டம்பர் இறுதி வரை பூஸ்டர் டோஸ் செலுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நிராகரிப்பு

நிராகரிப்பு

அதற்கேற்றபடி, இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடப்படவில்லை... ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கோரிக்கையை ஜெர்மனியும், பிரான்ஸும் நிராகரித்துள்ளன... செப்டம்பர் மாதம் முதல் வயதானவர்கள் மற்றும் எளிதில் உடல்நிலை பாதிக்கக்கூடிய நபர்களுக்கு 3வது டோஸ் போடப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக சொல்லி உள்ளார்.. அதேபோல, செப்டம்பர் மாதம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நோயாளிகள், முதியவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை செலுத்த விரும்புகிறோம் என்று ஜெர்மனியும் தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
     தடுப்பூசி

    தடுப்பூசி

    பிரான்ஸை பொறுத்தவரை இதுவரை 64.5 சதவீத மக்களுக்கும், ஜெர்மனியில் 62 சதவீத மக்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது... பிரான்சில் 49 சதவீதம் பேருக்கும், ஜெர்மனியில் 53 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. எனினும் உலக சுகாதார அமைப்பு , வேண்டாம் என்று சொல்லியும் 3வது டோஸை இரு நாடுகளும் செலுத்துவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Germany and France Ignore WHO Request and they Will Give vaccine Booster dose
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X