இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. குண்டுமணி தங்கமாவது வாங்கி வச்சுக்கோங்க.. இக்கட்டான நேரம்
நியூயார்க்: நேற்று இரவு அமெரிக்காவில் வட்டியை நிர்ணயிக்கும் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் வட்டி நிதி விகிதத்தை 4.25% முதல் 4.5% வரையிலான இலக்கு வரம்பிற்குள் வைப்பதாக அறிவித்தது. அதாவது தற்போது உள்ள வட்டி விகிதத்தை குறைக்கவோ, ஏற்றவோ இல்லை.
ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவும் ரெபோ ரேட் போலத்தான். இந்த வட்டி புள்ளிகள் குறைக்கப்பட்டால்.. கண்டிப்பாக டாலர் மதிப்பு சரியும். வரும் நாட்களில் இனி தொடர்ந்து டாலர் மதிப்பு சரியும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் அறிவித்து விட்டதால் இனி டாலர் விகிதம் சரிவை நோக்கியே செல்லும். இதனால் டாலர் மதிப்பு சரிவது உறுதியாகிவிட்டது. இதனால் தங்கத்தின் மதிப்பிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $3053.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை $3199.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலும் தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் பாதுகாப்பான ரியல் பணம் தங்கம்தான். இதனால் மக்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள். ஏற்கனவே அமெரிக்க அதிபர் உலகம் முழுக்க பல நாடுகள் மீது வர்த்தக போரை தொடுத்துள்ளார்.
டாலர் மதிப்பு
டாலர் மதிப்பு சரிந்தால் உலக பொருளாதாரம் சரியும். அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் உலகம் முழுக்க பொருளாதாரம் சரியும். விலை உயரும். பணத்தின் மதிப்பு சரியும் . மார்க்கெட் கிராஷ் ஆகும். மக்கள் பாதுகாப்பாக இருக்க தங்கத்தில் முதலீடு செய்வார்கள். பணத்தின் மதிப்பு சரிவதால்.. பாதுகாப்பாக இருக்க ரியல் பணமான தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இப்படி முதலீடு செய்வதால் தங்கத்தின் மதிப்பு உயரும். தங்கத்தின் தேவை அதிகரிக்கும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயரும். எனவே வரும் நாட்களில் தங்கம் வாங்குவதே முறையான செலவாக.. பாதுகாப்பான விஷயமாக இருக்கும்.
ஏற்கனவே அமெரிக்க சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,60,164 ஆக உயர்ந்து உள்ளது. உலக வரலாற்றில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இவ்வளவு அதிகம் உயர்வது இதுவே முதல்முறை.
1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட மூன்றரை பவுன் ஆகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணக் கொள்கைகளால் பொருளாதார நிலையின்மை உண்டாகி உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக $3,000 (ரூ. 2.6 லட்சம்) மதிப்பைத் தாண்டி அங்கே விற்பனை ஆகிறது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் சரியும் அபாயம் உள்ளது.
-
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications