அரை டன்.. அமெரிக்காவில் விழுந்த ராட்சச விண்கல்.. அப்படி குலுங்கிய பூமி.. பதறிய நாசா.. என்ன நடந்தது?
நேற்று அந்த விண்கல் விழுந்த போதும் சோனிக் பூம் சத்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்: நேற்று மாலை அமெரிக்காவில் விண்கல் ஒன்று விழுந்து உள்ளது. 1000 பவுண்ட் எடை கொண்ட விண்கல் அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் பகுதியில் விழுந்து உள்ளது.
உலகம் முழுக்க திடீரென யுஎப்ஓ குறித்த அச்சமும், ஏலியன் வருகை குறித்த விவாதங்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதிலும் அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து யுஓஎப்க்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது பெரிய பரபரப்பை, விவாதங்களை ஏற்படுத்தியது.
யுஎப்ஓக்கள் குறித்த அச்சம் உலகம் முழுக்க எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் அடுத்தடுத்து யுஎப்ஓக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சீனாவிலும் இன்று ஒரு யுஎப்ஓ கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சீன விமானப்படை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யுஎப்ஓ
எந்த ஒரு விமானம் அல்லது பறக்கும் பொருள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். அதாவது வானில் பறக்கும் ஒரு பொருள் என்னெவென்றே தெரியவில்லை என்றால் அது யுஎப்ஓ ஆகும். இந்த யுஎப்ஓ விவகாரங்களுக்கு இடையில்தான் அமெரிக்காவில் விண்கல் ஒன்று விழுந்து உள்ளது. 1000 பவுண்ட் எடை கொண்ட விண்கல் அமெரிக்கவின் தெற்கு டெக்ஸாஸ் பகுதியில் விழுந்து உள்ளது. இது 2 அடி அகலம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எப்படி இருந்தது
பொதுவாக பூமிக்குள் நுழையும் எந்த பொருளாக இருந்தாலும் வளிமண்டல காற்று உரசல் காரணமாக தீ பற்றி எரியும். இதனால் அவை பூமியை நெருங்கும் முன் மொத்தமாக எரிந்து சாம்பல் ஆகும். ஆனால் அதையும் மீறி பெரிய எரிகற்கள். விண்கற்கள் பாதி எரிந்த நிலையில் பூமியில் விழும். இப்படி ஆயிரக்கணக்கில் எரிகற்கள் பூமியில் விழுந்துள்ளன. அந்த வகையில் நேற்று விழுந்த விண்கல் பாதி எரிந்த நிலையில் விழுந்து உள்ளது. இரண்டு பாதியாக உடைந்து ஒரு சின்ன பாதி மட்டும் பூமியை அடைந்து உள்ளது. மற்ற பெரிய பாதி அப்படியே வரும் வழியிலேயே எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

எங்கே விழுந்தது
தெற்கு டெக்சாஸில் உள்ள மெக் ஆலன் பகுதியில் இந்த விண்கல் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளையும் நாசா வெளியிட்டு உள்ளது. இந்த விண்கல் விழும் போது குறிப்பிட்ட பகுதியில் பெரிய அதிர்வு ஏற்பட்டு உள்ளது. பூமி குலுங்குவது போல மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு உள்ளது. முதலில் இதை பலரும் நிலநடுக்கம் என்று நினைத்து உள்ளனர். சிலர் இது குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்றும் நினைத்து உள்ளனர். இதை பற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்து உள்ளனர். அதன்பின் நடத்திய விசாரணையில்தான் இது விண்கல் என்று உறுதி செய்யப்பட்டது.

சோனிக் பூம்
பொதுவாக ஒரு பொருள் சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லும் போது பயங்கர சத்தம் கேட்கும். போர் விமானங்கள் பறக்கும் போது இந்த சத்தம் கேட்கும். நேற்று அந்த விண்கல் விழுந்த போதும் இதே போன்ற சத்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கல்லின் மற்ற சில சிறிய பாகங்களும் அருகருகே விழுந்து இருக்கின்றன. இந்த விண்கல் விழுந்த காரணத்தால் மக்கள் யாரும் பலியாகவில்லை. கட்டிடம் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை. இந்த கல்லின் எடை அரை டன்.. அதாவது கிட்டத்தட்ட 500 கிலோ எடை இருந்ததாக கூறப்படுகிறது.

விமானம்
இந்த பகுதியில் சென்ற இரண்டு விமானங்கள் அந்த விண்கல்லை பார்த்தது குறிப்பிடத்தக்கது. விண்கல் பூமியில் மோதும் சமயத்தில் இரண்டு விமானங்களும் விண்கல்லை கண்டு உள்ளது. இந்த விண்கல் பூமியில் மோத போகிறது என்பதை நாசா முன்கூட்டியே கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பூமியை பாதுகாப்பதில் நாம் இன்னும் முன்னேற வேண்டும். பூமியை நோக்கி வரும் அபாயங்களை இன்னும் துல்லியமாக கணிக்க பழக வேண்டும் என்பது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications