9 மாத விண்வெளி வாழ்க்கை.. சுனிதாவுக்கு இவ்வளவு ஆபத்தா? பூமிக்கு திரும்பிய பின்னரும் பிரச்சனை!
நியூயார்க்: நீண்ட காலமாக விண்வெளியில் இருப்பவர்கள் பல வகையான உடல்நலப்பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சுனிதா வில்லியம்ஸுக்கும் இதுபோன்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
சுனிதா பூமிக்கு திரும்பியவுடன், இயல்பான வாழ்க்கையை வாழ அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என விண்வெளி துறை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பலம் இழக்கும் எலும்புகள்:
விண்வெளியில் ஈர்ப்பு சக்தி குறைவு. எனவே எந்த பொருளுக்கும் எடை இருக்காது. பொதுவாக எடையை தாங்கும் எலும்புகள்தான் வலுவடையும். இதன் அர்த்தம் தினவும் வெயிட் லிப்டிங் செய்தால்தான் எலும்பு ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதல்ல. நாம் சாதாரணமாக செய்யும் வேலைகள் நமது எலும்பை வலுப்பத்தி வைத்திருக்கும்.
ஆனால் விண்வெளியில் எலும்பை வலுப்படுத்துவற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே அது பலவீனமாகியிருக்கும். விண்வெளியில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 1-2% வரை எலும்புகள் பலவீனமடையும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சுனிதா இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
பார்வை திறன் பாதிப்பு:
விண்வெளி சூழல் உடலில் இருக்கும் நீரை, மண்டைக்கு ஏற்றிவிடும். இதனால் மண்டைக்குள் அழுத்தம் ஏற்படும். இது பார்வை திறனை பாதிக்கும். நியூரோ கண் நோய்குறி (Spaceflight-Associated Neuro-Ocular Syndrome) என்று இதற்கு பெயர். அதேபோல இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் விண்வெளியில் இதயம் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், இதே நிலைமை நீடித்தால் இதய செயலிழப்பு கூட ஏற்படலாம்.
கதிர்வீச்சும், நோய் எதிர்ப்பும்:
விண்வெளியில் ஏகப்பட்ட கதிர்வீச்சுகள் இருக்கின்றன. இவை புற்றுநோயை உருவாக்கும் அபாயம் கொண்டது. என்னதான் சர்வதேச விண்வெளி மையம் பாதுகாப்பானதாக இருந்தாலும் கூட, கதிர்வீச்சு தாக்குதலுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல பூமியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும். இது மனித உடலை பாதிக்கும். ஆனால் நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல், இதனை எதிர்த்து சண்டை செய்யும். இதனால் நமக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கும்.
ஆனால் விண்வெளியில் எந்த பாக்டீரியாவும் இருக்காது. எனவே, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதற்கான வாய்ப்பு இயல்பாகவே விண்வெளி வீரர்களுக்கு இருக்கிறது.
மனநல பிரச்சனைகள்:
பூமியில் இருக்கும் மனிதர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். போர் அடித்தால் சரக்கடிக்க போகிறோம். சனிக்கிழமை இரவுகளில் பார்டி செய்கிறோம். கோயில் போகிறோம், மார்கெட், கறிக்கடை, அலுவலகம், டீக்கடை என சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். ஆனால் விண்வெளி மையத்தில் இதற்காக வாய்ப்பு இல்லை. தனிமை மட்டும்தான் இருக்கும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்? எனவே இது மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். தனிமை, வெறுமை, பேச்சுவார்த்தை துணை இல்லாதது, மன அழுத்தம், பயம், தூக்கமின்மை ஆகியவை விண்வெளி வீரர்களை பாதிக்கும்.
உணர்ச்சி மற்றும் நரம்பியல் மாற்றங்கள்:
விண்வெளியின் வித்தியாசமான காலநிலை, நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் பூமிக்கு திரும்பிய பின்னர் விண்வெளி வீரர்கள் நடப்பதற்கும், பொருட்களை எடுப்பதற்கும் கூட சிரமத்தை எதிர்கொள்வார்கள். எனவே இதற்கான பயிற்சிகள் மருத்தவர்கள் மூலம் வழங்கப்படும். இது தவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தூக்கமின்மை பிரச்சனையும் ஊட வீரர்களுக்கு ஏற்படும்.


Click it and Unblock the Notifications
