அமெரிக்காவிற்கே பயத்தை காட்டிய ஹூதிகள்? 1.5 மடங்கு சுற்றிச் செல்லும் உலகின் 'மோஸ்ட் டேஞ்சரஸ்' போர்க்கப்பல்
நியூயார்க்: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் அதிபயங்கர 'நிமிட்ஸ்' ரக விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ், வழக்கமான பாதையைத் தவிர்த்து ஆப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட தூரம் பயணம் செய்து வருவது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. அதாவது வழக்கமான தூரத்தை விட 1.5 மடங்கு தூரம் "ஹூதிக்களின் தாக்குதலுக்கு பயந்து சுற்றி வந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
உலகின் டான் என அமெரிக்கான் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக ஈரான் மற்றும் ஹவுதிக்கள் இருக்கிறார்கள். ஹவுதிக்களுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது. கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டேப் பகுதிகளில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அமெரிக்காவின் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

அத்துடன செங்கடலின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதிகள், "எங்கள் விரல்கள் எப்போதும் டிரிக்கரில் தான் இருக்கும்" என்று அமெரிக்காவிற்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். இதன் காரணமாகவே அந்தப் பாதையில் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்ற சூழல் நிலவி வந்திருந்தது
இந்த சூழலில் வழக்கமாக அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து புறப்படும் போர்க்கப்பல்கள், ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக மத்திய தரைக்கடலில் நுழைந்து, சூயஸ் கால்வாய் வழியாகச் செங்கடலை அடைந்து அரபிக்கடலுக்குள் நுழையும். இந்தத் தூரம் சுமார் 8,000 முதல் 9,000 கடல் மைல்கள் மட்டுமே இருக்கும
இந்நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில் நோர்போக் கடற்படைத் தளத்திலிருந்து 5,000 மாலுமிகளுடன் புறப்பட்ட யுஎஸ்எஸ் ஜார்ஜ் புஷ் போர்க்கப்பல், இந்த முறை சூயஸ் கால்வாய் பாதையைத் தவிர்த்துவிட்டது. கடந்த வாரம் இக்கப்பல் நமிபியா நாட்டின் கடற்கரை அருகே காணப்பட்டது. ஆப்பிரிக்காவின் தென்கோடியான 'நன்னம்பிக்கை முனையை' கடந்து, அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைய இந்தக் கப்பல் திட்டமிட்டிருக்கிறது
இந்த நீண்ட தூரப் பயணத்தால், கப்பல் கடக்க வேண்டிய தூரம் 13,000 முதல் 15,000 கடல் மைல்களாக அதிகரித்துள்ளது. அதாவது வழக்கமான தூரத்தை விட இது 1.5 மடங்கு அதிகம். அமெரிக்கா தனது மிக வலிமையான போர்க்கப்பலையே ஹூதிகளின் ட்ரோன் தாக்குதலுக்குப் பயந்து செங்கடல் வழியாக அனுப்பத் தயங்குவதையே இது காட்டுகிறது என உலக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே அங்கு நிலைகொண்டுள்ள 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' கப்பலுடன் இணையவே இந்த அதிரடி பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசே ஹூதி கிளர்ச்சிக் குழுவின் அச்சுறுத்தலுக்குப் பயந்து 1.5 மடங்கு நீண்ட பாதையைத் தேர்ந்தெடுப்பது, சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான வர்த்தகக் கப்பல்களும் இதே நீண்ட பாதையைப் பின்பற்றத் தொடங்கினால், போக்குவரத்துச் செலவு அதிகரித்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட போர்க்கப்பல்களுக்கே செங்கடலில் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண வர்த்தகக் கப்பல்களின் நிலை என்ன என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்திருக்கிறது. செங்கடலில் ஹூதிகளின் ஆதிக்கம் அமெரிக்காவையே அதன் பாதையை மாற்ற வைத்திருப்பது, உலக அரசியலில் ஒரு புதிய அதிகாரப் போட்டியான திகைக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications