B-2 ஸ்டெல்த் பாமர் விமானங்கள்.. நடுவானில் நிரப்பப்பட்ட எரிபொருள்! ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி?
டெஹ்ரான்: கடந்த 2 வாரங்களாக நேரடியாக நடந்து வந்த ஈரான் இஸ்ரேல் போரில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி உள்ளது. போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் தாக்கப்பட்டு உள்ளன. போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?
இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. நேற்று மாலையே அமெரிக்கா 3-4 B-2 stealth bombers விமானங்களை ஈரான் நோக்கி அனுப்பியது. குண்டுகளுடன் சென்ற இந்த விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பியது. அப்போதே இரவு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிக எடை கொண்ட குண்டுகளை ஏற்றி சென்றதால், இந்த விமானங்கள் குறைந்த எரிபொருளுடன் டேக் ஆப் செய்தது. இதனால் நடுவழியில்தான் கூடுதல் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போதே தாக்குதல் நடத்த போவது உறுதியானது. இந்த நிலையில்தான் அமெரிக்கா ஈரான் அணு உலை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் நடத்தி உள்ளது. ஈரானின் அணுசக்தியை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டு உள்ளது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
ஸ்டெல்த் வகை விமானங்களான B-2 stealth bombers பயன்படுத்தி.. 30,000-lb எடை கொண்ட குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. "பங்கர் பஸ்டர்" எனப்படும் குண்டுகள் ஆகும் இவை. இதன் மூலம் ஈரானின் சுரங்க அணு ஆயுத அமைப்புகள் அழிக்கப்பட்டு உள்ளன.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாணியில் ஈரான் உள்ள நுழைந்து, குறிப்பிட்ட தளங்களை மட்டும் தாக்கிவிட்டு, அமெரிக்க போர் விமானங்கள் வெளியேறிவிட்டன. ஃபோர்டோ போன்ற ஆழமாகப் சுரங்க பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளன அணுசக்தி வசதிகள் அமெரிக்காவால் அழிக்கப்பட்டு உள்ளது.
உறுதி செய்த டிரம்ப்
ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரான் பதிலடி
இதற்கு ஈரான் விரைவில் பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்காவின் ஈடுபாடு "மிகவும் ஆபத்தானது" என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்பு கூறியிருந்தார். இஸ்தான்புல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் மக்கள் குண்டுவீச்சை எதிர்கொண்டு இருக்கும்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என்றார்.
-
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு











Click it and Unblock the Notifications