அமெரிக்கா முதல் கனடா வரை! உலக நாடுகளை மிரட்டும் இந்திய உளவுத்துறை! களத்தில் "ரா" ஏஜெண்ட்ஸ்! அதிருதே
சென்னை: அமெரிக்கா தொடங்கி கனடா வரை உலக நாடுகளை இந்திய உளவுத்துறை மிரட்ட தொடங்கி உள்ளது. மற்ற நாடுகளில் சென்று ஆபரேஷன் செய்வதன் மூலம் பல வல்லரசு நாடுகளை இந்திய உளவுத்துறையான ரா மிரள வைத்துள்ளது.
பொதுவாக உளவுத்துறை என்றால் உலக அளவில் இஸ்ரேலின் மொஸாட், அமெரிக்காவின் சிஐஏ ஆகியவை பிரபலம். இவர்கள் பிரபலம் அடைய காரணம்.. உள்நாட்டில் செய்யும் ஆப்ரேஷன்களை விட வெளிநாட்டில் செய்யும் ஆபரேஷன்கள்தான். இஸ்ரேல் என்னும் "உருவாக்கப்பட்ட" நாடு.. சுற்றி சுற்றி இஸ்லாமிய நாடுகள் இருந்தும் இத்தனை காலம் வலுவாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க அவர்களின் மொசாட் பலம்தான் காரணம்.
சிஐஏவும் அப்படித்தான். உலகம் முழுக்க சிஐஏ செய்த, செய்து கொண்டிருக்கும் ஆபரேஷன்கள் பல. சமீபத்தில் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ கூட அவர் சீனாவுடன் நெருக்கமாக இருந்ததால் சிஐஏ எடுத்த ஆக்சன்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது சிஐஏதான் இம்ரான் ஆட்சியை கவிழ்த்தது என்று கூறப்பட்டது.

இந்தியா மிரட்டல்: இந்தியாவின் ரா பற்றி பலரும் இப்படி பேசியது இல்லை. ஆனால் ரா பலமுறை இது போன்ற ஆபரேஷன்களை செய்துள்ளது. பாகிஸ்தானில் இப்போது பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. வங்கதேசம் பிரிய கூட இந்திரா காந்தி ராவை பயன்படுத்தி விதமே காரணம்.
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியே ஆசிய கண்டத்திலும் ரா மேற்கொள்ளும் பணிகள் பல வியப்பை ஏற்படுத்த கூடியவை. ஆனால் பலரும் யோசிக்காத விஷயம்.. இந்தியாவின் ரா மேற்கு உலகில் இதே போல வேலையை காட்டும் என்பதுதான். ஆசியாவில் மட்டுமே ரா பணிகளை செய்யும் என்று எதிர்பார்த்த உலக நாடுகளுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மேற்கு உலகத்திலும் ரா அசாத்திய வேலைகளை செய்து வருகிறது.
அசாத்திய ரா: அமெரிக்கா தொடங்கி கனடா வரை உலக நாடுகளை இந்திய உளவுத்துறை மிரட்ட தொடங்கி உள்ளது. மற்ற நாடுகளில் சென்று ஆபரேஷன் செய்வதன் மூலம் பல வல்லரசு நாடுகளை இந்திய உளவுத்துறையான ரா மிரள வைத்துள்ளது.
அதில் ஒன்றுதான் நேற்று அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டு. அமெரிக்க மண்ணில் சீக்கியர் ஒருவரை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் பல வெள்ளை மாளிகை சோர்ஸ்கள் பகிர்ந்த தகவலை வெளியிட்டுள்ளன.
( அமெரிக்க மண்ணிலேயே.. சீக்கியரை கொல்ல சதி? விட மாட்டோம்! இந்தியாவிற்கு பிடன் வார்னிங்.. சொன்னது என்ன? )
அதன்படி அமெரிக்க மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டிருக்கலாம் என பிடன் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
நியூயார்க்கில் இயங்கி வரும் வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுனை குறிவைத்ததாகக் கூறப்படும் சதிதிட்டத்தை அமெரிக்கா முறியடித்துள்ளதாம். அமெரிக்க அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. நேரடியாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்த காரணத்தால் இந்த கொலை நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக அந்த செய்திகளில் கூறப்பட்டு உள்ளன.

வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுன் "நீதிக்கான சீக்கியர்களின் குழு" என்ற குழுவில் இயங்கி வருகிறார். இந்த குழுவின் பொது ஆலோசகர் ஆவார். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து காலிஸ்தான் நாட்டை பிரிப்பதற்காக போராடும் குழுக்களில் ஒன்றாகும். இவரைத்தான் கொலை செய்ய இந்தியா முயன்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
கனடா பிரச்சனை; அதேபோல் கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி இருந்தார்.
அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.
ஜோ பிடன்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் உலக நாடுகளை இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒன்று திரட்ட கனடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர் உலக நாட்டு தலைவர்களுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா கனடா மோதலில் ஃபை ஐஸ் உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது.












Click it and Unblock the Notifications