Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேட்கவே ஷாக்கா இருக்கே! டிரம்ப் மட்டும் கேஸில் தோல்வி அடைந்தால் இத்தனை வருடம் ஜெயிலா? போச்சே!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தான் குற்றம் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். 34 பிரிவுகளின் கீழ் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று டிரம்ப் வாதம் வைத்தார்.

அவர் செய்திருப்பது முதல் டிகிரி கிரிமினல் குற்றம் ஆகும். அதோடு அந்த கிரிமினல் குற்றத்தை பயன்படுத்தி அவர் தேர்தலில் முறைகேடு செய்ய பார்த்து இருக்கிறார் என்றும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாகவே அவருக்கு எதிராக 34 கவுண்டில் வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. நேற்று இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜரான டிரம்பின் கை ரேகை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன.

 அதிகாரபூர்வம்

அதிகாரபூர்வம்

அதிகாரபூர்வமாக அவர் தற்போது கைது செய்யப்பட்டுவிட்டார். இருந்தாலும் முன்னாள் அதிபர் என்பதால் அவர் விசாரணை முடியும் வரை வெளியிலேயே இருப்பார். அவரை ஜெயிலில் போட மாட்டார்கள். அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் கண்டிப்பாக சிறையில் அடைப்பார்கள். சரி அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டால் அப்படி என்ன சிறை தண்டனை கொடுக்கப்படும்? அதற்கு முன் டிரம்ப் செய்த தவறு என்ன என்று பார்ப்போம். 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்ப் இந்த பணத்தை ஸ்டோமி டேனியல்ஸ் என்ற பெண்ணிற்கு கொடுத்து உள்ளார். அந்த பெண்ணுடன் இவருக்கு நெருக்கமாக இருந்த தொடர்பு காரணமாக இந்த பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தவறு என்ன?

தவறு என்ன?

அதிபர் தேர்தலுக்கு முன்பாக ஸ்டோமி டேனியல்ஸ் ஊடகங்களை தொடர்பு கொண்டு தனக்கும் டிரம்பிற்கும் இருக்கும் தொடர்பு பற்றி சொல்ல போவதாக பேட்டி அளித்துள்ளார். அதாவது 2006ல் இவர்கள் ஒன்றாக பாலியல் உறவு வைத்துக்கொண்டதை பற்றி சொல்லப்போவதாக கூறி உள்ளார். 2005ல் டிரம்ப் தனது தற்போதைய மனைவி மெலினா டிரம்பை திருமணம் செய்து இருந்தார். 2006லேயே டிரம்ப் கள்ள உறவு வைத்த நிலையில், 2016 அதிபர் தேர்தலுக்கு முன் இதை பற்றி சொல்ல போவதாக ஸ்டோமி டேனியல்ஸ் கூறி இருந்துள்ளார். இதையடுத்து அவரை சரி கட்ட வேண்டும் என்று, அவருக்கு 130000 டாலர் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை நடந்த எதுவும் தவறு கிடையாது. மெலினா டிரம்ப் தனது கணவர் மீது புகார் கொடுக்காத வரை இது எதுவுமே தவறு கிடையாது. ஆனால் இங்கே டிரம்ப் செய்த தவறு என்பது.. அந்த 130000 டாலருக்கு அவர் கணக்கு காட்டியதுதான்.

தண்டனை

தண்டனை

அந்த தொகையை தனது லாயருக்கான பீஸ் என்று இவர் கணக்கு காட்டி இருக்கிறார். இது நியூயார்க் சட்டப்படி குற்றம் ஆகும். இங்குதான் டிரம்ப் மாட்டிக்கொண்டு உள்ளார். அதோடு தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் வெளியே தெரிய கூடாது என்று காசு கொடுத்து இவர் வாக்காளர்களை ஏமாற்றி உள்ளார். இது இரண்டும்தான் இப்போது அவர் மீது வைக்கப்படும் கிரிமினல் குற்றச்சாட்டு. ஒரு குற்றத்தை மறைக்க கணக்கு வழக்குகளை தவறாக காட்டுவது என்பது ஒரு பெலோனி கிரைம். இதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இதில் அவர் மீது 34 கவுண்ட் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தவறுகள் அனைத்திற்கும் சேர்த்து மொத்தம் 136 ஆண்டுகள் வரை டிரம்ப் சிறைக்கு செல்ல முடியும்.

 அதிகபட்சம்

அதிகபட்சம்

அதாவது எல்லா குற்றத்திற்கும் அதிக பட்சம் தண்டனை வழங்கினால் 34 ஆண்டுகள் வரை ஜெயிலில் போட முடியும். ஆனால் அவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இல்லை. அதனால் உண்மையான தண்டனை பெரும்பாலும் அதைவிட குறைவாகவே இருக்கும். அதிகபட்சம் இதில் டிரம்பிற்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. இதில் டிரம்ப் மீது இன்னொரு ரகசிய புகாரும் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த புகார் பற்றிய விவரம் பொதுவில் வெளியிடப்படவில்லை. டிரம்ப் பொய்யான கணக்கு காட்டியது மட்டுமின்றி தேர்தலில் தன்னை உத்தமர் போல காட்ட பொய் சொன்னதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

 134 வருடம்

134 வருடம்

இந்த புகார்கள் அனைத்திலும் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அனைத்திற்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் 134 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். ஆனால் அவ்வளவு அளிக்கப்பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் கண்டிப்பாக அரசியல் ரீதியாக டிரம்பிற்கு இது மிகப்பெரிய வீழ்ச்சி. இனி டிரம்ப் குடியரசு கட்சியின் பிரைமரி தேர்தலில் கூட வெற்றிபெற வாய்ப்பு குறைவு. அதனால் அதிபர் தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் தேர்வாக சான்ஸ் மிக மிக கம்மி.

அதிபர்

அதிபர்


இந்த வழக்கில் ஜூரி குழு தற்போது டிரம்ப் குற்றம் செய்தவராக நம்புவதாக குறிப்பிட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை நடக்கும் வரை டிரம்ப் ஜெயிலில் இருக்க வேண்டும். அவருக்கு பெயில் கிடைக்காது. இந்த குற்றத்திற்கு பெயில் கிடையாது. ஆனால் டிரம்ப் முன்னாள் அதிபர் என்பதால் சில விதி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் ஜெயிலுக்கு செல்லவில்லை. டிசம்பர் மாதம் மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும்.. டிரம்ப் கையில் விலங்கு போட்டு அவரை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+