20 மில்லி செகண்ட்.. கண் இமைப்பதை விட வேகமாக.. பலூன் போல வெடித்த டைட்டன் நீர்மூழ்கி? என்ன நடந்தது?
நியூயார்க்: டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. வெறும் 20 மில்லி நொடியில்.. கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்ற டைட்டன் நீர்மூழ்கி கடலில் மூழ்கி வெடித்துள்ளது. இதில் பயணிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் நீர்மூழ்கியின் பாகங்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.

நீர்மூழ்கி கப்பலின் மேல், கீழ், பின் பக்க பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை நிறைவு பெற்றதாகவும், நீர்மூழ்கி கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதோடு அதில் பயணம் செய்த 5 பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
வெடித்தது?: கப்பலின் பாகங்களை காட்டி அமெரிக்க கடற்படை இந்த விபத்து குறித்து உறுதியாக அறிவித்தது. டைட்டானிக் கப்பலின் அருகிலேயே 1600 அடி ஆழத்தில் இந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விபத்திற்கு Catastrophic Implosionதான் காரணம் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. அதாவது பேரழிவை ஏற்படுத்தும் உள்வெடிப்பு.
1600 அடி ஆழத்தில் கடலின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். அங்கே கட்டுப்பாடு இல்லாத ஒரு பொருள் போகும் போது வேகமாக அழுத்தத்துடன் தண்ணீர் உள்ளே செல்லும். இதனால் ஒரு நொடியில் நீர் மூழ்கி வெடித்து இருக்கும். இதுவே Catastrophic Implosion என்கிறார்கள். ஒரு நொடியில் உள்ளே தண்ணீர் வேகமாக சென்று அந்த நீர் மூழ்கி அழிந்து இருக்கும்.
பலூன்: இது பலூன் போல வெடித்ததாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி ஒரு காற்று அடைத்த பலூனில் ஊசியை வைத்து குத்தினால் எப்படி வெடிக்கும். அப்படித்தான் இதுவும் வெடித்து உள்ளது. நீர் மூழ்கி உள்ளே சட்டென தண்ணீர் அதிக அழுத்தத்துடன் சென்று இருக்கும்.
படங்களில் காட்டுவது போல சின்ன துளை ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரெல்லாம் உள்ளே சென்று இருக்காது. மாறாக ஒரே நொடியில் படீரென்று தண்ணீர் உள்ளே சென்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் வெறும் 20 மில்லி நொடிகளில் நடந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அதோடு உள்ளே இருந்தவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்க போவதற்கான சின்ன க்ளூ கூட இருக்காது. ஏனென்றால் அந்த அளவுக்கு வேகமாக நடந்து இருக்கிறது. அந்த அழுத்தத்திலேயே உள்ளே இருந்தவர்கள் பலியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கலவையான சுவர்: டைட்டனின் சுவர் பகுதிகள் அதாவது பிரஷர் ஹல் பகுதிகள் டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர்களின் கூட்டுப் பொருளின் கலவையால் ஆனது. இது சோதனை முயற்சி அடிப்படையிலான பொருள். இது மிக மிக புதியது. இது கிட்டத்தட்ட எலாஸ்டிக் போன்ற குணத்தை கொண்டது. ஒரு கட்டத்திற்கு மேல் பிரஷர் தாங்க முடியாமல் இது விரிந்து இருக்கும். அதனால் உள்ளே தண்ணீர் சென்று அதன்பின் நீர் மூழ்கி வெடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர்களின் கலவையால் இதன் பாகங்களை உருவாக்கியதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications