டிரம்ப் சும்மா இருக்க மாட்டார் போல! இந்தியாவிற்கு மேலும் நெருக்கடி தர முடிவு! வெள்ளை மாளிகை திட்டம்
நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார். உக்ரைன் போரை முன்னிட்டு ரஷ்யா மற்றும் அதன் எண்ணெய் கொள்முதல் நாடுகள் மீது தடைகளை அதிகரிக்க அவர் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா மீது கடுமையான தடைகள் வரும் நாட்களில் வரலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க போவதாக டிரம்ப் பலமுறை எச்சரித்து இருந்தார். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை அவர் தொடர்ந்ததால் இந்தத் தடைகளை விதிக்காமல் இருந்தார். ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

ரஷ்யா மீது இரண்டாம் கட்ட தடைகள்
ரஷ்யா மீதான தடைகளின் இரண்டாம் கட்டத்திற்கு அவர் தயாராக உள்ளாரா என்று வெள்ளைத் மாளிகையில் ஒரு செய்தியாளர் கேட்டபோது, ஆம், நான் தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் பதிலளித்தார். அவர் மேலதிக விளக்கம் அளிக்கவில்லை. ஜனவரியில் பதவியேற்றபோது உக்ரைனில் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று அவர் முதலில் கணித்திருந்தபோதிலும், சண்டையை நிறுத்த முடியாததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதன் காரணமாகவே கூடுதலாக வரிகளை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ரஷ்யா-உக்ரைன் போரின் மூலம் இந்தியா ஆதாயம் அடைவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய எண்ணெயை மலிவு விலையில் வாங்கி, சுத்திகரித்து, அதை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் இந்தியா லாபம் ஈட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் உடனான ஒரு நேர்காணலில், ரஷ்யாவிற்கு இந்தியா ஒரு சலவை மையம் போல செயல்படுகிறது என்று வெள்ளை மாளிகை ஆலோசகர் குறிப்பிட்டார்.
இந்தியா பிராமணர்கள் லாபம்
உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலுக்கு முன்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கவில்லை. ஆனால் இப்போது வாங்குகிறார்கள். இந்தியா வாங்கும் இந்த எரிபொருள்தான் ரஷ்ய போர் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ரஷ்யாவிற்கு ஒரு சலவை இயந்திரம் போல செயல்படுகிறது. ரஷ்யா எண்ணெயை விற்கும் கூடாரம் போல இந்தியா செயல்படுகிறது. இந்திய மக்கள் தங்கள் சொந்த காசை கொடுத்த ரஷ்ய போருக்கு உதவுகிறார்கள். இதை எல்லாம் செய்ய வைத்து பிராமணர்கள் இலாபம் ஈட்டுகிறார்கள். ரஷ்யாவின் எண்ணெயை இந்தியாவின் தலையில் கட்டி பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்," என்று நவரோ கூறினார்.
இந்திய சுத்திகரிப்பாளர்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, அதைச் சுத்திகரித்து, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். ரஷ்யா எண்ணெய் விற்று லாபம் சம்பாதிக்கும் இந்த உக்ரைனியர்களைக் கொல்கிறது. இந்தியர்களும் இதனால் பலன் எல்லாம் அடையவில்லை. தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி அதை இந்திய மக்களுக்கு விற்காமல் அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
மோடி ஒரு சிறந்த தலைவர்... அவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற போதிலும், புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் ஏன் உறவு கொள்கிறார் என்று எனக்குப் புரியவில்லை, என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவிற்கு ஆதரவாக சீனாவும், ரஷ்யாவும் களமிறங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா களமிறங்கி உள்ளது.
இந்தியாவிற்கும் - சீனாவிற்கு நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அமெரிக்க வரி சர்வாதிகார விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சீனா களமிறங்கி உள்ளது. அதேபோல் இன்னொரு கம்யூனிஸ்ட் நாடான இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்கிறது.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்












Click it and Unblock the Notifications