ஹமாசுக்கு ஆதரவு.. அமெரிக்கா செய்த செயலால் தன்னைத்தானே நாடு கடத்திய இந்திய மாணவி.. யார் இந்த ரஞ்சனி?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சர்ச்சையில் சிக்கினார் இந்திய மாணவின ரஞ்சனி சீனிவாசன். இதையடுத்து அவரை அமெரிக்கா குறிவைத்து ஆக்ஷனில் இறங்கியபோது ரஞ்சனி சீனிவாசன் தன்னைத்தானே நாடு கடத்தி உள்ளார். இந்த ரஞ்சனி சீனிவாசன் யார்? அவர் அமெரிக்காவில் என்ன செய்தார்? அவருக்கு எதிராக அமெரிக்கா என்ன செய்தது? என்பது பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது மெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவேன் என்று கூறினார்.

US ranjani srinivasan

அதன்படி அதிபரானதுமே டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரை ராணுவ விமானத்தில் நாடு கடத்தி உள்ளார்.நாடு கடத்தும் நடவடிக்கையின்போது அவர்களின் கை, கால்களில் சங்கிலியால் கட்டி அனுப்பி வைத்து வருகிறார் டொனால்ட் டிரம்ப்.

இந்திய மாணவி

இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த பிஎச்டி மாணவி தன்னைத்தானே நாடு கடத்தி உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஞ்சனி சீனிவாசன். நம் நாட்டை சேர்ந்த இவர் எப்-1 மாணவர் விசாவில் அமெரிக்கா சென்றிருந்தார்.

நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் Urban Planning பிரிவில் பிஎச்டி படிப்பை படித்து வந்தார். இவர் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அதாவது இஸ்ரேலும், அமெரிக்காவும் நல்ல நட்பு நாடுகளாக உள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக 15 மாதம் போர் புரிந்தது.

இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவும் ஹமாஸ் அமைப்பினரை பயங்கரவாத பட்டியலில் வைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் ரஞ்சனி சீனிவாசன் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்டுள்ளார். அதாவது இஸ்ரேல்-காசா போரில் பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் ரஞ்சனி சீனிவாசன் பங்கேற்றுள்ளார்.

முத்திரை குத்திய அமெரிக்கா

இதனால் அவர் ஹமாஸ் எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று அமெரிக்கா முத்திரை குத்தியது. காசாவை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்கு இஸ்லாமிய அமைப்பு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படியான சூழலில் காசா, பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக பேராட்டம் நடத்துவோர் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

US ranjani srinivasan

அந்த வகையில் ரஞ்சனி சீனிவாசன் மீதும் அமெரிக்கா நடவடிக்கையை தொடங்கியது. அதன்படி மார்ச் 5ம் தேதி அவரது மாணவர் விசாவையும் அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்தது. அதோடு அவரை நாடு கடத்தும் நபர்களின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. இதன்மூலம் அமெரிக்க ராணுவ விமானத்தில் கை, கால்களில் சங்கிலி மாட்டி ரஞ்சனி சீனிவாசன் நாடு கடத்தப்படும் நிலை உருவானது. ஆனால் அதனை அவர் தவிர்க்க நினைத்தார். இதனால் ரஞ்சனி சீனிவாசன் தன்னை அமெரிக்கா அரசு நாடு கடத்தும் முன்பே தானே நாடு கடத்திக்கொண்டு இந்தியா வந்துள்ளார்.

தன்னை தானே நாடு கடத்துவது எப்படி?

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அது என்ன தன்னைத்தானே நாடு கடத்துவது என்று. அதாவது அமெரிக்க அதிபரானதும் டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தானாகவே வெளியேற வேண்டும் என்று கூறி வருகிறார். இப்படி தானாக வெளியேறாதவர்களை தான் அமெரிக்கா அரசு பிடித்து கை, கால்களில் சங்கிலியிட்டு நாடு கடத்தி வருகிறது.

மாறாக இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள விரும்பாதவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் வகையில் அந்த நாட்டின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு முகமை சார்பில் பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அதில் பெயரை பதிவு செய்து கொண்டு அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு சொந்த நாட்டுக்கு வர முடியும். இதுதான் தன்னைத்தானே நாடு கடத்தி கொள்வது என்று அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.

தன்னை தானே நாடு கடத்தினால் என்ன பலன்

அந்த வகையில் தான் ரஞ்சனி சீனிவாசனும் பிரத்யேக செயலியில் பெயரை பதிவிட்டு அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்க தன்னை தானே நாடு கடத்தி வந்து இறங்கி உள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி நாடு கை, கால்களில் சங்கிலியிட்டு நாடு கடத்தும் நபர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது. ஆனால் தன்னைத்தானே நாடு கடத்தி கொள்ளும் நபர்களால் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல முடியும். அதோடு குறிப்பிட்ட காலம் அங்கு தங்கி அமெரிக்கா குடியுரிமையை கூட பெற முடியும். இதனால் தான் ரஞ்சனி சீனிவாசன் தன்னைத்தானே நாடு கடத்தி கொண்டு நம் நாட்டுக்கு வந்துள்ளார்.

இதற்கிடையே தான் அமெரிக்காவில் இருந்து ரஞ்சனி சீனிவாசன் இந்தியாவுக்கு புறப்பட்டு செல்லும் வீடியோவை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்துறை செயலாளர் கிறிஸ்டி நோயம் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛அமெரிக்காவில் தங்கி இருக்கவும், படிக்கவும் விசா வழங்குவது பெரிய பாக்கியம். வன்முறை, பயங்கரவாதத்தை ஆதரித்தால் அந்த சலுகை ரத்து செய்யப்படும். அவர்கள் யாரும் அமெரிக்காவில் இருக்க முடியாது' என்று கூறி உள்ளார். இன்னொரு பதிவில், ‛‛கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் பயங்கரவாத ஆதரவாளர்களில் ஒருவர், தன்னை தானே நாடு கடத்தி கொள்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

US ranjani srinivasan

ரஞ்சனி சீனிவாசன் யார்?

ரஞ்சனி சீனிவாசன் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடல் பாடப்பிரிவில் பிஎச்டி படித்து வருகிறார். அதற்கு முன்பாக ஆமதாபாத் சிஇபிடி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். இந்தியா, அமெரிக்கா சேர்ந்து செயல்படுத்தும் புல்பிரைட் நேரு ஸ்காலர்ஷிப்பில் ஹார்ட்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் டிகிரி படித்தார். அதன்பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தபோது அவர் மீத நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ரஞ்சனி சீனிவாசன் படிக்கும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஹமாசுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே பாலஸ்தீன வம்சாவளியை சேர்ந்த மஹ்மூத் கலீல் என்ற மாணவர், லெக்கா கோர்டியா என்ற மாணவியை அமெரிக்கா கைது செய்தது. அந்த வரிசையில் இப்போது நம் நாட்டை சேர்ந்த ரஞ்சனி சீனிவாசன் தன்னை தானே நாட கடத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+