நாங்கள் நடத்தியது பதிலடி மட்டுமே! அது முடிந்துவிட்டது.. ஆனால் இஸ்ரேல் போரை தூண்டுகிறது: ஈரான்
நியூயார்க்: கடந்த ஏப்ரல் 1ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு, ஈரான் பதில் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்நிலையில், இதை காரணமாக வைத்துக்கொண்டு இஸ்ரேல் தற்போது தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனை உலக நாடுகள் கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவின் டமாகஸ்கஸில் உள்ள ஈரானின் துணை தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இஸ்ரேல் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.

எனவே ஈரான் பதிலடி கொடுக்க களத்தில் இறங்கியது. இந்த தாக்குதல் குறித்த ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் தேதி தாக்குதலை தொடுத்திருக்கிறது.
அன்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் தனது ஐயன் டோம் பாதுகாப்பு அம்சத்தை கொண்டும், அமெரிக்கா போர் கப்பல், பிரிட்டன் போர் விமானத்தை கொண்டும் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜெஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது.
இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சூழல் இப்படி இருக்கையில், திடீரென தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த தாக்குதலில் சுமார் 150 ராக்கெட்கள் வீசப்பட்டுள்ளன, 2 கமாண்டர்கள் உட்ட மூன்று ஹில்புல்லா போராளிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஈரான் மீதும் இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனை ஈரானின் ஐநா உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் கண்டித்திருக்கிறார். ஐநா சபையில் நேற்று பேசிய அவர், "ஈரானை குறி வைத்து எந்த தாக்குதலையும் எடுக்க கூடாது. நாங்கள் நடத்தியது பாதுகாப்பு மற்றும் எதிர் தாக்குதல்தான். கடந்த ஏப்ரல 1ம் தேதி இஸ்ரேல் செய்தது மிக மோசமான அத்துமீறல்.
ஐநாவின் சர்வதேச சட்டம் மற்றும் வியன்னா ஒப்பந்ததை இஸ்ரேல் வெளிப்படையாக மீறியிருக்கிறது. ஆனால் இதனை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த இரண்டு நாடுகளின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக தற்போது மத்திய கிழக்கில் போர் மூண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications