கணிப்பதில் பல உண்மையாகும் அதிசயம்.. இன்னொரு பாபா வங்காவா இந்த 19 வயது இளம்பெண்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் வசித்து வரும் 19 வயது இளம் பெண் ஒருவர் கணிக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    Baba Vanga-வின் அதிரவைக்கும் கணிப்புகள், 2022ல் நடந்த 2 பெரிய சம்பவங்கள்! *History

    ஏற்கெனவே இவர் கணித்த 28 விஷயங்களில் 10 விஷயங்கள் கணித்ததைப்போலவே நடந்துவிட்டதால், மீதமுள்ள விஷயங்களும் அப்படியே நடக்கும் என்று இணையவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

    It is a miracle that all predictions come true; Superpowers for a 19-year-old girl?

    1970 மற்றும் 80களில் 'பாபா வாங்கா' என்பவர் இதேபோல பல விஷயங்களை கணித்ததாகவும் அதில் சுமார் 85% கணித்ததைப்போலவே நடந்தது என்பதால் இந்த இளம்பெண் 2022ன் பாபா வாங்கா என அழைக்கப்படுகிறார்.

    அமெரிக்காவின் ஃபாக்ஸ்பரோ நகரத்தை சேர்ந்தவர் 19 வயதான ஹன்னா கரோல். தற்போது மேற்கத்திய நாடுகள் இந்த இளம் பெண்ணை குறித்துதான் பேசி வருகின்றன. ஏனெனில் இவர் கணித்த விஷயங்களில் பெரும்பான்மையானவை உண்மையாகவே கணித்ததைப்போலவே நடந்துவிடுவதால் கரோல் சமூக வலைத்தளங்களில் ஃபேமஸாகியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோல் கணித்திருந்த 28 விஷயங்களில் சுமார் 10 விஷயங்கள் கணித்ததைப்போலவே நடந்துள்ளன என்பதுதான் இதில் மாஸான தகவல்.

    இதன் காரணமாக கரோல் 'பாபா வாங்காவுடன்' ஒப்பிடப்பட்டு வருகிறார். வாங்கா, பல்கேரியாவை சேர்ந்த ஒரு மதகுரு. இவர்கள் 1970 மற்றும் 80களில் மிகவும் பிரபலமானவர். இவர் கணித்த விஷயங்களில் சுமார் 85% அப்படியே நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் 9/11 தாக்குதல், கருப்பினத்திலிருந்து ஒருவர் அந்நாட்டு அதிபராவார் என்பது முதல் பல விஷயங்களை வாங்கா கணித்ததாக கூறப்படுகிறது. இவர் கணித்ததைப்போலவே ஒபாமாவும் அமெரிக்காவின் அதிபரானார்.

    இதைப்போலவே கரோல் பல உலக நடப்புகளை கணித்திருந்தார். அதில், ஹாரி ஸ்டைல்ஸ் மற்றும் பியோனஸின் புதிய ஆல்பங்கள், ரிஹானா கர்ப்பமாக இருப்பது மற்றும் நிக் ஜோனாஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது உள்ளிட்டவை கரோல் கணித்ததைப்போலவே நடந்துள்ளது. இதனால் கரோல் சமூக வலைத்தளங்களில் தற்போது அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறார். கடந்த வாரம் பீட் டேவிட்சன் மற்றும் கிம் கர்தாஷியன் பிரிந்தபோது அவரது சமீபத்திய கணிப்பும் உண்மையானது.

    இவ்வாறு ஒவ்வொரு கணிப்பும் உண்மையாகும்போது தான் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகவும் கரோல் தெரிவித்துள்ளார். இவ்வாறு இவர் பிரபலமடைந்த பின்னர் மக்கள் சிலர் புகைப்படங்களை அனுப்பி திருமணம், குழந்தைப்பேறு, இல்லற வாழ்க்கை குறித்து கேட்டு தெரிந்துகொள்வதாக கரோல் தெரிவித்துள்ளார். இவ்வாறு தான் கணிக்கும் விஷயங்கள் அப்படியே நடப்பதாக மக்கள் தெரிவிப்பதாகவும் இதனால் தான் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் கரோல் தெரிவித்துள்ளார்.

    ஆனால், சோவியத் ஒன்றியம் 21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும், 2010ல் மூன்றாம் உலக போர் வரும் என்றும் வாங்கா கணித்திருந்தது பொய்யகா போனது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+