இந்தியாவின் பொருளாதாரமே பாதிக்கும்.. பலருக்கு வேலை போகும் அபாயம்.. டிரம்ப் அறிவிப்பால் வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள அதிக வரி விதிப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமையும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் துவ்வுரி சுப்பாராவ் எச்சரித்துள்ளார். ஜவுளி மற்றும் ரத்தினங்கள் போன்ற தொழிலாளர் மிகுந்த ஏற்றுமதித் துறைகளில் 50% அமெரிக்க வரி விதிப்பால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 2% மதிப்பிலான ஏற்றுமதிகள் பாதிக்கப்படும். இதனால் பலர் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சி ஒரு வருடத்திற்குள் 20-50 அடிப்படை புள்ளிகள் வரை குறையக்கூடும்.. இதனால் பலர் வேலைகளை இழக்க நேரிடும் என சுப்பாராவ் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் நிதிச் செயலாளராகவும் பணியாற்றிய சுப்பாராவ், அமெரிக்க அதிபரால் 'செயலிழந்த' பொருளாதாரம் என முத்திரை குத்தப்படுவது இந்தியாவின் நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

Donald Trump USA

இந்தியா டிரம்ப் மோதல்

இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. அதேபோன்று, ரஷ்யாவுடனும் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வர்த்தகம் இல்லை. ஆகவே, இப்போது இருப்பது இப்படியே இருக்கட்டும். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடேவ் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர் ஆபத்தான பாதையில் செல்கிறார்.. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடுமையாக பாதிக்கும் இந்தியா

ஜவுளி, காலணி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற விலைப் போட்டி மற்றும் பெருமளவு உற்பத்திக்கு பெயர் பெற்ற தொழிலாளர் மிகுந்த துறைகளில் லாப வரம்புகள் குறையும் இந்த துறைகள் பாதிக்கப்படும், ஆர்டர்கள் திசை திருப்பப்படும், வேலைகள் பறிபோகும், மற்றும் ஆலைகள் சுருக்கப்படும். இதன் தாக்கம் சமத்துவமற்றதாக இருக்கும், வருமான ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும்.

சீனாவின் அதிகப்படியான தொழில்துறை உற்பத்தித் திறன் மற்றும் அமெரிக்க சந்தையை இழந்ததற்கான இழப்பீடாக நமது சந்தைகளில் அவர்கள் மலிவாக பொருட்களை கொட்டுவதற்கான வாய்ப்பையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், அதிகரித்த வரி விதிப்பு நமது சீனா+1 இலக்கை பாதிக்கும். உள்நாட்டு வர்த்தகத் தடைகள் மற்றும் அதிக செலவுகள் காரணமாக உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் நுழைவதற்கே நாம் ஏற்கெனவே போராடி வருகிறோம்.

ஆசியான் அல்லது தெற்காசிய போட்டியாளர்களை விட அமெரிக்காவின் அதிக வரியை எதிர்கொள்வது இந்த ஒருங்கிணைப்பை இன்னும் கடினமாக்கும். அமெரிக்கா 50% இறக்குமதி வரியை தொடர்ந்தால், இந்திய ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள், மின்னணு சாதனங்கள், மருந்துகள் போன்ற துறைகளில் சரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்று சுப்பாராவ் கூறினார்.

டிரம்ப் இந்தியா வரி

டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+