மெட்டாவில் நடக்கும் மேஜர் மாற்றம்... மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன ஊழியர்கள்
நியூயார்க்: ஏஐ ஆதிக்கம் மென்பொறியாளர் துறைகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மென்பொறியாளர்கள் வேலை இழந்து வருகிறார்கள். இயந்திரத்தால் செய்யக்கூடிய வேலைகளை செய்யும் மென்பொறியாளர்கள் வேலை இழப்பது அதிகரித்து வருகிறது. பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா போன்றவை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.. இந்நிலையில் இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் விரும்புகின்றன.. பல மனிதர்கள் செய்யும் வேலையை ஒரு ஏஐ கம்ப்யூட்டர் செய்யும் என்கிற நிலை காரணமாகவே ஏஐ தொழில்நுட்பம் விரும்பப்படுகிறது. இதன் காரணமாக ஐடி துறையில் ஏஐயின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஏஐயால் வேலை இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செலவினத்தைக் குறைக்கும் வகையில், கூகுள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது நிறுவனப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது. அதற்கு பதில் ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்த்துக் கொள்கிறது. இந்த சூழலில் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க முடிவு செய்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணிநீக்கம் செய்யவும், அவர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்க்கவும் மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார். மேலும், பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் டாலர் (ரூ. 4.32 கோடி) வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதனிடையே மெட்டா நிறுவனம், தனது பணியாளர்களை செயல் திறன் அடிப்படையில் சுமார் 5% பேரை இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு பதில் புதியவர்களை பணியில் அமர்த்த போவதாகவும் அனைத்து பணியாளர்களுக்கும் இமெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் வரை, மெட்டா சுமார் 72,000 பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. இந்த ஐந்து சதவீதம் பேரை வேலையைவிட்டு நீக்குவதால், சுமார் 36000 பேர் வேலையை இழப்பார்கள். மெட்டா நிறுவனத்தின் சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பில் "திறமை குறைந்த பணியாளர்கள் விரைவாக வெளியேற்றப்படுவார்கள்.
அவர்களுக்கு இந்த ஆண்டு மிக தீவிரமான ஆண்டாக இருக்கும் என்றார். பிப்ரவரி 10ம் தேதிக்குள் இதுபற்றி அறிவிக்கப்படும் என தெரிகிறது. முன்னதாக கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 21,000 பேரை மெட்டா வேலையைவிட்டு நீக்கியிருந்தது. அதாவது தனது நிறுவனத்தில் 25 சதவீதம் பேரை அப்போது பணியில் இருந்து நீக்கியது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெர்பாமென்ஸ் அடிப்படையில் பணி நீக்கம் செய்வதை தொடர்கிறது.
பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா போன்றவை ஆட்குறைப்பு செய்து வருகின்றன.. இந்நிலையில் இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications