மொத்த உலகத்திற்கே பிரச்சனை வரும்.. பார்க்க போறீங்க.. ஈரான் விடுத்த வார்னிங்.. கவனமாக இருங்க!
நியூயார்க்: மத்திய கிழக்கில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போர்தீ, வெறும் எல்லைகளுடன் நின்றுவிடப்போவதில்லை; அது ஒட்டுமொத்த உலகையுமே சுருட்டிப் பிடிக்கப்போகிறது என ஈரான் அதிரடியாக எச்சரித்துள்ளது.
"இந்த மோதலின் தாக்கம் என்பது செல்வம், மதம் அல்லது இனம் என எதைப் பார்க்காமல் எல்லோரையும் தாக்கும்" என ஈரானின் உயர்மட்ட தூதர் அப்பாஸ் அராகச்சி (Abbas Araghchi) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இப்போது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த எச்சரிக்கை?
அராகச்சி தனது பதிவோடு, அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (US National Counterterrorism Center) இயக்குனர் ராஜினாமா செய்த செய்தியையும் இணைத்துள்ளார். போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்மட்ட அதிகாரிகள் வெளியேறுவது, மேற்கத்திய நாடுகளுக்குள்ளேயே நிலவும் அதிருப்தியை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக ஈரான் கருதுகிறது.
அராகச்சியின் வாதம் இதுதான்:
உலகளாவிய பாதிப்பு: போர் என்பது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தோடு முடிந்துவிடாது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, விநியோகச் சங்கிலி பாதிப்பு எனப் பொருளாதார ரீதியாகவும், அகதிகள் நெருக்கடி எனச் சமூக ரீதியாகவும் இது உலக நாடுகளைத் தாக்கும்.
மேற்கத்திய நாடுகளின் உள்முரண்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் சிலரே இந்தப் போர் அநீதியானது என குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். "நியாயமான இந்த எதிர்ப்பை சர்வதேச சமூகம் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்" என்பதே ஈரானின் கோரிக்கை.
அநீதியான போர்: ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதியைக் குலைக்கும் என்றும், இதனைத் தடுக்க மேற்கத்திய நாடுகள் தங்களது போக்கைத் தளர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
பின்னணி என்ன?
ஈரான் ஏன் இப்படிப் பேசுகிறது?.. கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல் - ஹமாஸ் - ஹெஸ்புல்லா எனத் தொடரும் மோதல்களில் ஈரானின் தலையீடு குறித்து மேற்கத்திய நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், "நாங்கள் மட்டும் பாதிக்கப்பட மாட்டோம், இந்தப் போரை ஆதரிக்கும் நீங்களும் (மேற்கத்திய நாடுகள்) அதன் விளைவுகளை அனுபவிப்பீர்கள்" என்கிற ஒரு மறைமுக எச்சரிக்கையைத்தான் அராகச்சி மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார்.
மத்திய கிழக்கின் அமைதி என்பது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி. மத்திய கிழக்கு பிராந்தியம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல, அது உலகப் பொருளாதாரத்தை இயக்கும் இதயத்துடிப்பு போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை இந்தப் பிராந்தியமே நிறைவு செய்கிறது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் எரிசக்தி சந்தையின் முக்கிய தூண்களாக உள்ளன.
குறிப்பாக, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகத்தான் உலகின் ஒரு சதவீத எண்ணெய் போக்குவரத்து தினசரி நடைபெறுகிறது. இங்கு ஏற்படும் சிறு பதற்றம் அல்லது போர்ச் சூழல் கூட, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்யும். எண்ணெய் விலை உயர்ந்தால், அது போக்குவரத்துச் செலவை அதிகரித்து, உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியத் தேவைகள் வரை அனைத்தின் விலையையும் உயர்த்தி ஒரு 'விலைவாசி ஏற்றச் சங்கிலியை' (Inflationary chain) உருவாக்கிவிடும்.
மத்திய கிழக்கு அச்சாணி முறிந்தால், அதன் பாதிப்பு அமெரிக்காவின் தெருக்களிலும் ஐரோப்பாவின் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்பதே ஈரான் சொல்ல வரும் கசப்பான உண்மை.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications