இதுதான் விதி.. ஹிட்லர், செர்னோபில் பேரழிவு, கொரோனாவில் இருந்து தப்பிய 95 வயது பாட்டி விபத்தில் பலி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பொதுவாக விதி வலியது என்று எனச் சொல்வார்கள். அதாவது ஒருவர் என்னதான் முயன்றாலும் விதியை வெல்லவே முடியாது என்பதே அதற்கு அர்த்தமாகும். அப்படி தான் வரலாற்றின் அதிபயங்கர பேரழிவு நிகழ்வுகளில் இருந்து தப்பிய 95 வயதான பெண் ஒருவர், கடந்த வாரம் சாலை விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அவர் கார் மோதியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

விதியை யாராலுமே மாற்ற முடியாது என்பார்கள். அதைத்தான் விதி வலியது எனச் சொல்வார்கள். என்ன தான் முயன்றாலும் விதியை ஒருவரால் மாற்றவே முடியாது என்பதே அதற்கு அர்த்தம்.

america offbeat

இது எந்தளவுக்கு உண்மை என்பதை உணர்த்தும் வகையில் தான் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது உலகின் பல மோசமான பேரழிவுகளில் இருந்து தப்பிய வயதான பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.


அமெரிக்காவில் வசித்த 95 வயது பெண்:

உக்ரைன் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்த 95 வயது பெண் மய்யா கில். இவர் உக்ரைன் மீதான நாஜிகளின் படையெடுப்பின் போது அதில் இருந்து தப்பினார். செர்னோபில் பேரழிவு ஏற்பட்ட போதிலும் அதிலும் நூலிலையில் உயிர் பிழைத்தார். கொரோனா பரவிய போதும் அதுவும் இவரைத் தாக்கியது. ஆனால், அதில் இருந்தும் வெற்றிகரமாகக் குணமடைந்தார். இப்படி பேரழிவுகளுக்குச் சவால் விட்டு வாழ்ந்து கொண்டிருந்த கில் கடந்த வாரம் தெருவைக் கடக்கும் போது வேன் மோதி உயிரிழந்தார்.

"டீப்சீக்" உலகமே உச்சரிக்கும் வார்த்தை இதுதான்! அமெரிக்காவின் கோட்டையை ஒரே நொடியில் காலி செய்த சீனா


அதாவது கில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் நகரில் வசித்து வந்தார். கடந்த வாரம் கில்லும் அவரது நர்ஸும் தனது வீட்டின் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது கார் மோதியுள்ளது. இதில் அவரது நர்ஸுக்கு லேசான காயமே ஏற்பட்டது. அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


உயிரிழப்பு:

ஆனால், கில்லுக்கு ஏற்கனவே 95 வயதாகி இருந்த நிலையில், விபத்தை அவரது உடலால் சமாளிக்க முடியவில்லை. இதனால் கில் உடலில் மிக மோசமான காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து என்பதால் டிரைவர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

தனது பாட்டி குறித்து கில்லின் பேத்தி கூறுகையில், "அவர் மிகவும் சுறுசுறுப்பான பெண்.. எல்லோருக்கும் அவரை பிடிக்கும். நான் சந்தித்ததிலேயே மிகவும் அன்பான நபர் அவர். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மட்டுமே அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது. இனிமேல் அவரை போல ஒருவரை நான் சந்திக்கப் போவதே இல்லை" என்றார்.


நாஜி:

மேற்கு உக்ரைனில் உள்ள க்மெல்னிட்ஸ்கி என்ற ஊரில் பிறந்தவர் கில். ஹிட்லரில் நாஜி தாக்குதலில் இருந்து தப்பிக்க இவர் 12 வயதில் தனது தாய் மற்றும் சகோதரருடன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வந்தார். பல ஆண்டுகள் அங்கேயே அவர் வசித்து வந்தார். அப்போது அங்குதான் அவர் தனது கணவர் வில்லியத்தை சந்தித்தார். இருவருக்கும் இரட்டை மகள்கள் உள்ளனர்.


செர்னோபில் பேரழிவு

பிறகு சோவியத் ஆட்சி அமைந்த போதும் அங்கேயே வசித்து வந்தனர். அப்போது 1986ம் ஆண்டில் செர்னோபில் அணுசக்தி பேரழிவின் பயங்கரத்தை இவர் கண்டார். இதில் கில் தனது உற்றார் உறவினர் எனப் பலரையும் இழந்தார். இந்த பேரழிவுக்குப் பின்னரே கில்லின் மகள் லாரிசா நியூயார்க் நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகுத் தனது குடும்பத்தினரையும் அழைத்து வந்தார். நியூயார்க்கின் பென்சன்ஹர்ஸ்டில் குடியேறிய அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர்.


கொரோனா

2020ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் போது கில்லின் கணவர் வில்லியமிற்கு கொரோனா பரவல் ஏற்பட்டது. வயது மூப்பு காரணமாக கொரோனாவை எதிர்த்து அவரால் போராட முடியவில்லை. இதனால் கில்லின் கணவர் வில்லியம் 2020இல் உயிரிழந்தார். கில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வில்லியம் உடலைக் கூட நேரில் பார்க்க கில்லுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இப்படிப் பல பேரழிவுகளைச் சந்தித்த கில் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+