அமெரிக்காவை அசைத்து போட்ட புயல்.. இருளில் தவிக்கும் 10 லட்சம் மக்கள்! விமான போக்குவரத்து பாதிப்பு
நியூயார்க்: கிழக்கு அமெரிக்காவை தாக்கிய கடுமையான புயல் காரணமாக 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
நேற்று முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையை அமெரிக்க வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. நேற்று தொடங்கிய கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழந்திருக்கிறது. மாலை 5 தொடங்கிய மழை விடிய விடிய பெய்திருக்கிறது. 10 மாகாணங்களில் இந்த கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருகிறது. புயல் காரணமாவே இப்படி பேய் மழை பெய்து வருகிறது. மழையுடன் ஐஸ் கட்டியும் வானத்திலிருந்து விழுந்ததால் வெளியில் நிற்க வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக வாஷிங்டன் மக்கள் கூறியுள்ளனர்.

டென்னசி முதல் நியூயார்க் வரை 10 மாகாணங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 3 கோடி பேர் வசிக்கின்றனர். புயல் தீவிரமடைந்தால் இவர்கள் அனைவரும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளவார்கள். தற்போது வரை வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் மட்டும் 92 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6,800 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக அதிபர் பைடனின் பயண திட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அட்லாண்டிக் பகுதியில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் இந்த பகுதியில் மீன் பிடிக்கவோ, சுற்றுலா அல்லது சரக்கு கப்பல்கள் எதுவும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழை பெய்து வரும் மாகாணங்களில் உள்ள நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் என அனைத்து மக்கள் கூடும் இடங்களையும் அரசு மூடியுள்ளது.
அதேபோல அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா, மேரிலாந்து, டெலாவேர், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, டென்னசி, மேற்கு வர்ஜீனியா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் ஓய்ந்த பின்னர்தான் பாதிப்பு குறித்து முழுமையாக தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications