ஆபரேஷன் ஏஞ்சல்! வங்கதேசம் உள்ளே சைலண்ட்டாக நுழைந்த அமெரிக்கா! வேலையை காட்டிய டிரம்ப்.. இந்தியா ஷாக்
நியூயார்க்: இந்தியா, சீனா வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்த நினைத்த நிலையில் , இரண்டு நாடுகளையும் எதிர்க்கும் விதமாக வங்கதேசத்திற்குள் அமெரிக்கா தலையிட தொடங்கி உள்ளது. அங்கே நாளுக்கு நாள் அமெரிக்க ராணுவ குவிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அங்கே ஆட்சி கவிழ அமெரிக்காதான் காரணம் என்ற வாதம் உள்ளது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காகவே அங்கே ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக விவாதங்கள் எழுந்தன. அதன்படியே ராணுவம் மற்றும் ராஜதந்திர ரீதியாக வங்கதேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சிட்டகாங் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பிராந்திய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா வங்கதேசம்
இந்தியாவின் வடகிழக்கு எல்லை மற்றும் மியான்மர் அருகே அமைந்துள்ள சிட்டகாங், அமெரிக்கா vs இந்தியா vs சீனா இடையே அதிகரித்து வரும் சர்வதேச மோதலின் மையமாக மாறியுள்ளது.
அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் ரக ராணுவ போக்குவரத்து விமானம் சமீபத்தில் சிட்டகாங் ஷா அமானத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் வழக்கமாக ஜப்பானின் யோகோட்டா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தரையிறக்கம், வங்கதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தலையீட்டை அதிகரிக்கும் ஒரு பரந்த திட்டத்தின் பகுதியாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் டாக்காவில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்க ராணுவம் சிட்டகாங்கில் அடிக்கடி கண்காணிப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
அமெரிக்காவிற்கு ஆதரவாக முகமது யூனுஸ்
நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் அமெரிக்காவிற்கு தீவிரமாக ஆதரவு அளித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில், வங்கதேசமும் அமெரிக்காவும் இணைந்து "ஆபரேஷன் பசிபிக் ஏஞ்சல்-25" மற்றும் "டைகர் லைட்னிங்-2025" போன்ற இருதரப்பு பயிற்சிகளை நடத்தின. இந்தப் பயிற்சிகள் பேரிடர் மீட்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தந்திரோபாய தயார்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தின. மேலும் ஒரு கூட்டுப் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளதாகவும், புதிய அமெரிக்கப் படைகள் கடந்த வாரம் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜதந்திர கணக்கீடு வங்கதேசம் மட்டுமன்றி அதற்கு அப்பால் ஆசியாவில் பல நாடுகளை குறி வைத்து நீண்டுள்ளது. அமெரிக்காவும் சீனாவும் மியான்மரில் கிளர்ச்சிக் குழுக்களை அணுகி வருவதாக ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது மியான்மரில் இதேபோல் ஆட்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா நினைக்கிறதாம். சீனாவிற்கு எதிராக போராட்டங்களை செய்யும் ஹாங்க் காங் உள்ளே நுழையவும் அமெரிக்கா இதே திட்டத்தை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
அமெரிக்காவின் திட்டம் - ஹசீனா அம்பலம்
ஏற்கனவே செயின்ட் மார்ட்டின் தீவை விட்டுக்கொடுக்க மறுத்ததால், தன்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார். மொத்தமாக வங்காள விரிகுடாவையும் கட்டுப்படுத்தும் விதமாக செயின்ட் மார்ட்டின் தீவை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டதாக ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய டீம் சார்பாக வெளியிடப்பட்ட தகவலின்படி, ஹசீனா, நாட்டை கவிழ்க்க சில தீவிரவாதிகள்தான் முயன்றனர். அவர்கள் மாணவர்கள் சாக வேண்டும். மக்கள் சாக வேண்டும் என்று நினைத்தனர். பலி எண்ணிக்கை உயர வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் நான் விடவில்லை. இதை தடுக்கவே நான் ராஜினாமா செய்தேன்.
சில தீவிரவாதிகள் மாணவர்களின் சடலங்கள் மீது அதிகாரத்தைப் பெற விரும்பினர், ஆனால் பதவி விலகுவதன் மூலம் நான் அதை அனுமதிக்கவில்லை. என்னிடம் செயின்ட் மார்ட்டின் தீவை பெற அமெரிக்கா முயன்றது. இதற்காக அமெரிக்கா தீவிரமாக காய் நகர்த்தியது. செயின்ட் மார்ட்டின் தீவை விட்டுக்கொடுக்க மறுத்ததால், தன்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டது.
வங்காள விரிகுடாவை அமெரிக்காவிடம் கொடுத்து இருந்தால் நான் பதவியில் இருந்து இருக்கலாம். செயின்ட் மார்ட்டின் தீவின் இறையாண்மையை அமெரிக்காவிற்கு கொடுப்பதன் மூலம் நான் ஆட்சியில் இருந்திருக்கலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அதனால் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக நான் இப்போது பதவி விலக வேண்டி இருக்கிறது, என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications