எஜமானுக்கு திடீர் பக்கவாதம்.. பக்கத்து வீட்டுக்காரரிடம் உதவி கேட்ட பூபு.. சாமர்த்தியசாலி தான்!
உயிருக்கு போராடிய தனது எஜமானை வளர்ப்பு நாய் காப்பாற்றிய நெகிழ வைக்கும் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் பக்கவாதம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை அவரது வளர்ப்பு நாய் காப்பாற்றிய நெகிழ வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மனிதனின் உற்ற தோழன் நாய் தான் என்பது பல சம்பவங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மனிதர்களைப் போலவே நாயையும் ஒரு குடும்ப உறுப்பினராகத் தான் நடத்துவார்கள். நாய்களும் சளைக்காமல் அவர்களுக்கு அன்பைக் கைமாறாகத் தரும்.
தற்போதும் அப்படி ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் நாய்களின் பாசத்தை உறுதிபடுத்தும் வகையில் அமெரிக்காவில் நடந்துள்ளது.

செல்ல நாய் பூபு
அமெரிக்க கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரூடி ஆம்ர்ஸ்ட்ராங். இவர் தற்போது வடக்கு கரோலினாவில் உள்ள ஓரியண்டல் எனும் பகுதியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது செல்ல நாய் பூபுவும் வசித்து வருகிறது.

திடீர் பக்கவாதம்
இந்நிலையில் கடந்த வாரம் ரூடிக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால் தொலைப்பேசியை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த பூபுவிடம், கண்களாலேயே யாரையாவது உதவிக்கு அழைக்கும்படி ரூடி சொல்லியிருக்கிறார்.

உதவி கேட்ட பூபு
அதைச் சரியாக புரிந்துகொண்ட பூபு, வெளியே ஓடிப்போய் அருகில் இருந்தவர்களை அழைத்து வந்திருக்கிறது. இதையடுத்து ரூடியின் நிலையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான கிம், அவசர உதவிக்கு அழைத்து ரூடியை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் ரூடி உயிர்பிழைத்துவிட்டார்.
Recommended Video

பாராட்டு
ரூடியின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் பூபு உதவிக்கு ஆட்களை அழைத்து வந்தது தான் என மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். இந்த தகவல் சமூகவலைதளங்களில் கசிய, பூபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சபாஷ் பூபு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications