கொலைகாரர்.. நீங்க எல்லாம் அதிபரா.. பிடனை பார்த்து கோபமாக கூச்சல் போட்ட மக்கள்.. என்னாச்சு?- வீடியோ
நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடன் 9/11 நினைவிடத்தில் மரியாதை செலுத்திய போது அங்கிருந்த பொது மக்கள் அவருக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் 9/11 நினைவஞ்சலி நேற்றும், இன்றும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அங்கு அல் கொய்தா அமைப்பு நடத்திய தாக்குதலில் 2996 பேர் வரை பலியானார்கள். இரட்டை கோபுரம், பென்டகன் ஆகியவற்றை பயணிகள் விமானத்தை கடத்தி அல்கொய்தா அமைப்பு 2001ல் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமாக தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்த தாக்குதலை நடத்திய ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்தது. 20 வருட போரில் தாலிபான் அடங்கி இருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி வந்துள்ளது. அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

தாலிபான் ஆட்சி
இந்த நிலையில் தாலிபானுக்கு எதிராக பிடன் செயல்பட்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பிடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வெளியேற்றிய விதம் சரியில்லை, அவர் அவசரப்பட்டுவிட்டார். தாலிபான்களிடம் பிடன் அடிபணிந்துவிட்டார் என்று அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் 190 பேர் வரை பலியானார்கள். இதில் அமெரிக்க படையினர் 12 பேர் வரை பலியானார்கள். ஐஎஸ் அமைப்பு நடத்திய இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உரிய பதிலடி கொடுக்கவில்லை.

டிரோன்
டிரோன் தாக்குதல்கள் நடத்தினாலும் பெரிதாக யாரையும் பழி தீர்க்காமல் அமெரிக்கா திரும்பி வந்தது. இதனால் தாலிபான்களுக்கு எதிராக பிடன் தொடர்ந்து அடிபணிந்து நடக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பிடனின் சமீபத்திய செயல்பாடுகள் அவருக்கான மதிப்பை குறைத்துள்ளது. பிடனுக்கான மக்கள் ஆதரவும் அமெரிக்காவில் குறைய தொடங்கியுள்ளது. அவர் வலிமையான தலைவர் கிடையாது என்ற கருத்து மக்கள் இடையே நிலவி வருகிறது. ஏற்கனவே அவர் சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சர்வதேச அரசியலிலும் அவர் தொடர்ந்து சொதப்பி வருவது கேள்விகளை எழுப்பி உள்ளது.

எதிர்ப்பு
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் 9/11 நினைவிடத்தில் மரியாதை செலுத்திய போது அங்கிருந்த பொது மக்கள் அவருக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நியூயார்க் பகுதியில் உள்ள நினைவிடத்தில் பிடன் அஞ்சலி செலுத்தினார். கடுமையான பாதுகாப்பிற்கு இடையில் பிடன் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த மக்கள் பிடனை பார்த்து கோபமாக ஊ என்று கத்தினார்கள். பிடனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஊ என்று கூச்சலிட்டனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வியை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை.
|
கடும் வார்த்தைகள்
பிடன் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் மக்களுக்கு பிடிக்கவில்லை. அதிலும் சரியாக 9/11 நினைவு நாளிற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா தோல்வி அடைந்து, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வென்றதை அமெரிக்க விரும்பவில்லை. இதனால் பிடனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கூச்சல் போட்டனர். அமெரிக்க மக்களின் மரணத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள். எப்போது வலுவாக செயல்பட போகிறீர்கள் என்று தொடர் கோஷங்களை எழுப்பி கூச்சல் போட்டனர்.
|
கொலை
இன்னொரு நபர் அங்கு பிடனை பார்த்து.. நீங்கள் எல்லோரும் கொலைகாரர்கள்.. அங்கே பாருங்கள் கொலை காரர்களை. ஊ .. ஊ.. ஓஒ.. ஆப்கானிஸ்தானில் நீங்கள் மோசமாக தோல்வி அடைந்துவிட்டீர்கள்.. மோசம்.. மோசம்.. என்று ஒருவர் கேள்வி எழுப்பி கோஷம் போட்டார். இன்னும் சிலர்.. ஊ.. நீங்கள் எல்லாம் அதிபரா என்று கோஷம் எழுப்பினார்கள். பிடனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பதாகைகளும் காட்டினார்கள். இதனால் நினைவிடத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
|
பேசவில்லை
பிடன் இந்த இடத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கே மக்கள் கூச்சல் போட்டதால் பிடன் எதுவும் பேசவில்லை. இதையடுத்து பிடன் அங்கிருந்து சென்று வாஷிங்டனில் உள்ள பென்டகன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின் பென்சில்வேனியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆனால் அந்த இரண்டு இடங்களிலும் அவர் பேசவில்லை. இரண்டு இடத்திலும் பிடன் வருகைக்குக்கு எதிராக மக்கள் கூச்சல் போட்டார்கள். இதை பிடன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் 9/11 சம்பவம் அமெரிக்க மக்களை ஒன்றாக இணைத்த நிகழ்வு. ஆனால் அதையும் மீறி பிடனுக்கு கடும் எதிர்ப்புகள் இந்த நினைவு நிகழ்ச்சியில் காணப்பட்டது.

மோசமான நிலை
பொதுவாக அமெரிக்க அதிபர்கள் ஆட்சியின் போது, அவர்களுக்கான மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடத்தப்படும். இதை ஆங்கிலத்தில் approval rating என்று அழைப்பார்கள். அதன்படி அதிபர் பிடனுக்கான மக்கள் ஆதரவு கடந்த கருத்து கணிப்பில் 53 ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அவருக்கான ஆதரவு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. அவருக்கு தற்போது மக்கள் ஆதரவு 46 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதும். அங்கு தாலிபான்கள் வெற்றி பெற்றதும் இந்த ஆதரவு குறைய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications