டிரம்ப் மீது புதினுக்கு எவ்வளவு பாசம் பாருங்க! சர்ச்சுக்கு போய் ரஷ்ய அதிபர் செய்த செயல்.. நண்பேண்டா
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல முயற்சி நடந்தது. கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்தவுடன் டொனால்ட் டிரம்ப்பிற்காக, ரஷ்ய அதிபர் சர்ச்சுக்கு சென்று செய்த செயல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது டொனால்ட் டிரம்ப் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளது. சர்ச்சில் புதின் என்ன செய்தார்? என்பது பற்றி அமெரிக்காவுக்கான மத்திய கிழக்கு நாடுகளின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் விளக்கி உள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரீசை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதோடு ரஷ்யாவின் போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு, அமெரிக்கா சார்பில் நிதி மற்றும் ஆயுத உதவிகள் என்பது வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையை முன்னாள் அதிபர் ஜோ பைடன் தான் செய்தார்.

இதனால் ரஷ்யா - அமெரிக்கா உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு நிலைமை மாறத்தொடங்கி உள்ளது. அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பிரச்சனை மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. உக்ரைன் மீதான போரை நிறுத்துவதில் டிரம்ப் ஆர்வமாக உள்ளார். இதுதொடர்பாக அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 2 முறை தொலைபேசியில் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்யா பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இது இருநாடுகள் இடையேயான உறவு வலுப்பெற்று வருவதற்கு சான்றாகும்.
இப்படியான சூழலில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது டொனால்ட் டிரம்பை கொல்ல முயன்றபோது அவருக்காக விளாடிமிர் புதின் சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி ஸ்டீவ் விட்காஃப் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் கடந்த ஆண்டு நடந்தது. அப்போது டொனால்ட் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதுபற்றி அறிந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சர்ச்சுக்கு சென்று சம்பவத்தை கூறி டிரம்புக்காக பிரார்த்தனை செய்தார். புதினுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. தனது நண்பனுக்காக புதின் பிரார்த்தனை செய்தார்.
இது அவர்கள் இடையேயான உறவு மற்றும் தகவல் தொடர்பை காட்டும் வகையில் உள்ளது. எனக்கு ரஷ்யா கலைஞர் வரைந்திருந்த டொனால்ட் டிரம்பின் ஓவியத்தை தந்தார். பலரும் புதினை கெட்டவர் என்று கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இது மிகவும் பிரச்சனையான சூழல்'' என்று கூறினார். டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நல்ல நட்பு என்பது முன்பு இருந்தே இருந்து வருகிறது. டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபரான போதே, புதினுடன் நட்பில் இருந்தது. இப்போது 2வது முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையிலும், புதினுடன் நட்பு பாராட்டி வருகிறார். அதோடு உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications