நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரான் மீது அமெரிக்கா மூன்றாவது பொருளாதார தடை.. டிரம்ப் ஆக்சன்.. உலக நாடுகள் அதிர்ச்சி!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா நேற்று இரவு மூன்றாவது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    USA Vs Iran: ஈரான் மீது அமெரிக்கா மூன்றாவது பொருளாதார தடை- வீடியோ

    நியூயார்க்: ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா நேற்று இரவு மூன்றாவது பொருளாதார தடை விதித்தது. இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரான் அமெரிக்க இடையிலான சண்டை நாளுக்கு நாள் பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது. மிக முக்கியமான அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹினி மற்றும் டிரம்ப் இடையே நேரடியாக வார்த்தை சண்டைகள் தொடங்கி உள்ளது.

    The USA implies third sanctions on Iran in Steel and Copper field

    அமெரிக்காவுடன் 2015ல் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை விலகிக் கொள்வதாக ஈரான் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதனால் அமெரிக்கா ஈரான் மீது கடுமையான கோபம் கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலம் மட்டுமே ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க விடாமல் அமெரிக்க தடுத்து வந்தது.

    உலக நாடுகள் பல பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஈரான் இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. உலக நாடுகளுக்கு இடையில் போர் பதற்றத்தை உண்டாக்கியது.

    இதையடுத்து அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சென்ற வருடம் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது. அதன்படி ஈரானிடம் இருந்து யாரும் எண்ணெய் பொருட்கள் வாங்க கூடாது என்று கூறியது. இது முதல் பொருளாதார தடை ஆகும்.

    அதன்பின் சில மாதங்களில் இரண்டாவது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. அதாவது ஈரானிடம் இருந்து பெட்ரோலியம் கெமிக்கல்கள் வாங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் தற்போது ஈரானிடம் இந்தியா பெட்ரோல் டீசல் வாங்குவது தடைபட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா மூன்றாவது பொருளாதார தடை விதித்து உள்ளது. ஈரானிடம் இருந்து ஸ்டீல், இரும்பு, காப்பர் பொருட்கள் வாங்க கூடாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானில் ஸ்டீல் வர்த்தகம் மூன்றாவது பெரிய வர்த்தகம் ஆகும். இதை அமெரிக்கா தற்போது தடை செய்துள்ளது.

    ஈரான் அதிபர் ஹாசன், அமெரிக்காவிற்கு எதிராக வெளிப்படையாக கடந்த சில நாட்களாக பேசி வந்தார். இதையடுத்தே கோபம் கொண்ட டிரம்ப், ஈரான் மீது புதிய தடையை விதித்துள்ளார். இது ஈரானுக்கு பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    English summary
    The USA implies third sanctions on Iran in Steel and Copper field, which may hit their economy well.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X