நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐயயே.. இதைப்போய் சாப்பிடுவாங்களா.. இந்த பொண்ணு பண்ற வேலையை பாருங்க!

இந்த வித்தியாசமான உணவு பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடக்கத்தில் எதையும் உணரவில்லை என்றாலும் கூட பின்னாட்களில் அவர்களது உடல் மிக மோசமாக பாதிப்படைந்து உயிரிழந்து விடுகின்றனர்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் ஜெனிஃபர் எனும் பெண்மணி 'மெத்தைகளை' உண்ணும் வித்தியாசமான பழக்கத்தை கொண்டிருக்கிறார். இது குறித்து தற்போது வெளிவந்துள்ள வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் வித்தியாசமான உணவு பழக்கங்களை கொண்டவர்களை நாம் பார்த்திருப்போம். கடல்வாழ் உயிரினங்களிலேயே மீன்கள், இறாக்கள் தவிர வேறு சில உயிரினங்களை உண்பவர்களை பார்த்தால் நமக்கு அந்நியமாக தெரியும். ஆனால் ஒருவர் மெத்தைகளை சாப்பிடுகிறார் என்றால் உங்ளால் நம்ப முடிகிறதா? ஆம் அமெரிக்காவை சேர்ந்த பெண்மணிதான் இந்த வித்தியாசமான பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

TLC எனும் சேனலுக்கு பேட்டியளித்த இந்த பெண்மணி இதனை ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமல்லாது லைவ் ஷோவில் மெத்தையை அவர் சாப்பிட்டு காட்டியிருக்கிறார். தான் 5 வயதில் இருக்கும்போது முதன் முதலாக குஷனில் உள்ள பஞ்சை சாப்பிட தொடங்கியதாகவும், இதனையடுத்து இந்த பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதனை கைவிட முடியாமல் ஒரு நாளைக்கு ஒரு சதுரடி என மெத்தையை சாப்பிட தொடங்கியுள்ளார்.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

இது குறித்து அவர் கூறுகையில், "இதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகளை சந்தித்திருக்கிறேன். இது உடலிலிருந்து கழிவுகளாக வெளியேறிவிடுகிறது. ஆனால் ஏகப்பட்ட கேஸ் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதை சாப்பிடும்போது உடன் மயோனிஸ் அல்லது சாஸ் என எதையும் சேர்த்துக்கொள்வதில்லை. இதை அப்படியே சாப்பிடதான் எனக்கு பிடிக்கும். நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் இதனை நிறுத்த முடியவில்லை. இப்பழக்கத்தை நிறுத்துவது மிகவும் ஒரு கஷ்டமான காரியம்தான். இருப்பினும் நான் இதனை விரைவில் நிறுத்திவிடுவேன் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இரும்பு

இரும்பு

இதேபோல பலரும் வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்களை இதற்கு முன்னர் கொண்டிருந்துள்ளனர். இது ஒரு அரிய நரம்பியல் நோயாகும். இதற்கு Pica என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நுரை போன்று தோற்றமுள்ளவை, ருசி இல்லாதவை அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்குறியதாகும். பொதுவாக கர்ப்பிணி நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு தற்காலிகமாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் பெயிண்ட்கள், இரும்பு, சோப்பு, தலை முடி போன்றவற்றை சாப்பிடுவார்கள். சில நேரத்தில் ஈயம் போன்ற போருட்களையும் சாப்பிடுவார்கள். இதுதான் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

விமானம்

விமானம்

இதற்கு முன்னர் இதேபோல மான்சியர் மாங்கட்அவுட் எனும் ஒருவர் இரும்பு பொருட்களை உணவாக சாப்பிட்டு வந்துள்ளார். இவர் சாப்பிடாத இரும்பு பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரும்பு பொருட்களை சாப்பிட்டுள்ளார். கடைசியில் ஒரு சிறிய ரக விமானத்தையே அவர் சாப்பிட்டுள்ளார். இவருடைய உணவு பழக்கத்திற்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டது. ஆனால் கடைசியில் இதே பாதிப்பால் அவர் உயிரிழந்தார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த நோய் உருவாக ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. இரும்பு மற்றும் துத்தநாக ஊட்டச்சத்து குறைப்பாட்டால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மட்டுமல்லாது ஸ்கிசோஃப்ரினியா மற்றும் அப்செஸிவ்-கம்பல்சிவ் கோளாறு உள்ளவர்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஸ்கிசோஃப்ரினியா மற்றும் அப்செஸிவ்-கம்பல்சிவ் கோளாறு என்பது ஒரு வகை மனம் சார்ந்த பிரச்சனையாகும்.

English summary
Jennifer, a woman living in America, has a strange habit of eating 'mattresses'. The videos that have come out in this regard are being talked about a lot among the netizens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X