Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனடா, சீனா, மெக்சிகோவுக்கு வரி கன்பார்ம்.. மீண்டும் முருங்கை மரம் ஏறிய டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அறிவிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரி விதிப்பு நிச்சயம் அமல்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இதில் சீனாவுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Donald Trump US Mexico Canada

நேற்று தனது சோஷியல் மீடியாவில் இது குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டிருக்கிறார். மார்ச் 4ம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். இவரின் அறிவிப்புபடி கனடாவுக்கும், மெக்சிகோவுக்கும் 25% வரியும், சீனாவுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10% உடன் கூடுதலாக 10% வரியும் விதிக்கப்படும்.

"ஓபியாய்டு (Opioid) மற்றும் ஃபென்டனில் (Fentanyl) போதை பொருட்கள் கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றன. ஒரு மாதத்திற்கு முன்னரே வரி எச்சரிக்கை விடுத்தும் இந்த போதை பொருட்களின் சப்ளை குறையவில்லை. இது குறையாத வரை வரியும் குறையாது. எனவே திட்டமிட்டபடி வரி விதிக்கப்படும்" என டிரம்ப் கூறியிருக்கிறார்.

வரி விஷயத்தில் டிரம்ப் வேதாளமாக இருக்கிறார் என்றும், எவ்வளவு சொல்லியும் வரி எனும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறார் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்க மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவிலேயே கிடைப்பது கிடையாது. உதாரணமாக மரங்களை எடுத்துக்கொள்ளலாம். நம்மூரில் உள்ளதை போல அமெரிக்காவில் வீடுகள் கான்கிரீட் கொண்டு கட்டப்படுவது கிடையாது. பெரும்பாலும் மரங்களில்தான் வீடுகள் கட்டப்படுகிறது. அவ்வளவு வீடுகளை கட்ட தேவையான அளவுக்கு மரங்கள் அமெரிக்காவில் கிடையாது. எனவே சீனாவிலிருந்து அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இப்படி மெக்சிகோவிலிருந்து வாகன உதிரி பாகங்களும், கனடாவிலிருந்து வேறு சில பொருட்களும் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இந்த வணிகம் மேற்குறிப்பிட்ட 3 நாடுகளுக்கும் நல்ல லாபம்தான். ஆனால் இவர்கள் லாபத்தில் கை வைக்கும் விதமாக சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவின் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. டிரம்ப்பின் வரி காரணமாக அமெரிக்காவில் இந்நாட்டின் பொருட்களின் விலை உயரும். விலையுயர்வு காரணமாக அமெரிக்க மக்கள் இந்த பொருட்களை வாங்குவதை தவிர்ப்பார்கள்.

இதனால் மேற்குறிப்பிட்ட 3 நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும். உலகமே அமெரிக்க டாலரில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், இந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டால் 3 நாடுகளும் பதிலுக்கு வரியை விதிக்கும். பதில் வரியால் அமெரிக்கா கடுப்பாகி மீண்டும் வரி விதிக்கும். இப்படி மாறி மாறி வரியை விதித்துக்கொண்டால் அது வர்த்தக போருக்குதான் வழி வகுக்கும். இதனால் இந்தியாவுக்கு சில நன்மைகள் இருந்தாலும், பாதிப்புகளும் கடுமையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+