டிரம்ப் ஏலத்தில் விட்ட இயேசு ஓவியம்.. ஒரே கையெழுத்தில் எகிறிய ரேட்.. ஓவர்நைட்டில் சேர்ந்த ரூ.23 கோடி
நியூயார்க்: இயேசுவின் ஓவியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏலம் விட்ட சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்து உள்ளது.. புத்தாண்டு தினத்தன்று டிரம்ப் வைத்த பிரம்மாண்ட விருந்தில் நடந்த இந்த ஓவியமும், அப்போது டிரம்ப் விருந்தினர்களிடம் ஜாலியாக ஜோக் அடித்து பேசியதும் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.. டிரம்ப் வைத்த விருந்தின்போது, திரட்டப்பட்ட ரூ.23 கோடி நிதி என்ன ஆனது? இதனை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம் ...!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பாம் பீச் பகுதியில் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான மார்-ஏ-லாகோ இல்லம் உள்ளது.. இங்குதான் புத்தாண்டு நாளையொட்டி சிறப்பு விருந்து நடைபெற்றது.. டொனால்டு டிரம்ப் இந்த சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இயேசு கிறிஸ்து ஓவியம்
இந்த விருந்தில் பல முக்கியமான தொழி்ல் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டனர்... டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த விருந்தில் பிரபல கிறிஸ்தவ ஆன்மீக ஓவியர் வெனெசா ஹோரபியூனா பங்கேற்று இருந்தார்.. அப்போது அவர் அனைவர் முன்னிலையிலும் இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை அச்சு அசலாக வரைந்தார்...
'ஸ்பீட் பெயிண்டிங்' முறையில், இசை மற்றும் நடனத்துடன் ஓவியத்தை வேகமாக வரைந்தார்.. மேடையில் ஓவியர் வேகமாக வரையும் ஓவியத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்... வெனெசா ஹோரபியூனா இயேசுவின் ஓவியத்தை வரைந்ததுமே, அதை டிரம்பின் தொண்டு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
ஏலம் விட்ட ஓவியம்
உடனே டிரம்ப் மேடைக்கு எழுந்து சென்று, ஏலத்தை துவங்கினார்.."இது அற்புதமான ஓவியம்.. இயேசுவின் உருவம் உயிரோட்டமாக உள்ளது.. இதற்கு யார் அதிகம் விலை கொடுத்து வாங்க போறீங்க" என்று விருந்தினர்களை உற்சாகப்படுத்தினார்..
பிறகு ஓவியத்தின் ஆரம்ப விலையே ஒரு மில்லியன் டாலர் என்றார் டிரம்ப்.. இதையடுத்து, அங்கிருந்த விருந்தினர்கள் அடுத்தடுத்த ஏலம் விலையை உயர்த்தினார்கள்.. சிலர் இரண்டு மில்லியன், சிலர் இரு மில்லியன் ஐநூறு ஆயிரம் டாலர் வரை ஏல தொகையை சொன்னார்கள்..
கிண்டலடித்த டிரம்ப்
உடனே இதைக்கேட்டதுமே டிரம்ப், "அப்படின்னா இந்த கூட்டத்தில் பணம் வைத்து கொண்டு நிறைய பேர் இருக்காங்க போல' என்று கிண்டலாக சொன்னார்.. இதைக்கேட்டு அரங்கில் இருந்தவர்கள் சிரித்தனர்..
பிறகு டிரம்ப், அந்த ஓவியத்தில் தன்னுடைய கையெழுத்தை போட்டார்.. அடுத்த செகண்டே ஓவியத்தின் மதிப்பு மேலும் உயர்ந்தது... கடைசியில் $2.75 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது நம்முடைய இந்திய மதிப்பில் சுமார் 23 கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஓவியம் ஆரம்பத்தில் 8.5 லட்சம் ரூபாய்க்கு துவங்கிய நிலையில், டிரம்ப் கையெழுத்து போட்டதுமே ஏலம் ரேட் பெரிதாக உயர்ந்தது..
நல்ல காரியத்துக்கு போன பணம்
இறுதியில், ஏலத்தில் கிடைத்த பணத்தை டிரம்ப் தொண்டு நோக்கத்திற்காக வழங்கினார். அதில் ஒரு பகுதி St. Jude's குழந்தைகள் மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டது. மிச்சமுள்ள ஏலப்பணம், உள்ளூர் ஷெரீப் அலுவலகத்திற்கான தொண்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
மொத்தமாக, அமெரிக்காவில் நடந்த இந்த புத்தாண்டு விருந்து, ஓவியம் ஏலம், தொண்டு நிதி சேகரிப்பு ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து முடிந்த நிலையில், சோஷியல் மீடியாவில் இந்த செய்திதான் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications