நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வுஹனுக்கு முன்பே.. 2019 செப்டம்பரிலேயே டிரம்பிற்கு கொரோனா பற்றி தெரியும்.. அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் சீனாவை தாக்கும் முன் 2019 செப்டம்பர் மாதமே அந்த வைரஸ் குறித்து அமெரிக்கா டிரம்பிற்கு தெரியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வெள்ளை மாளிகையில் பணியாற்றிய முன்னாள் ஆலோசகர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீது புகார் உள்ளது. சீனாவில் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவிய போது, அதன் பரவலை தடுக்க டிரம்ப் எதுவும் செய்யவில்லை என்று புகார் உள்ளது.

இது தொடர்பாக அவருக்கு நிறையமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றும், அதை எல்லாம் டிரம்ப் காது கொடுத்து கேட்கவில்லை என்றும் புகார் உள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.. தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.. தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு "தலைவலி"

புகார் என்ன

புகார் என்ன

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் சீனாவை தாக்கும் முன் 2019 செப்டம்பர் மாதமே அந்த வைரஸ் குறித்து அமெரிக்கா டிரம்பிற்கு தெரியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வெள்ளை மாளிகையில் பணியாற்றிய முன்னாள் ஆலோசகர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அவரிடம் ஆலோசகராக இருந்த முன்னாள் மூத்த பொருளாதார நிபுணர் இது தொடர்பாக டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். 2019 இறுதியில் இந்த கொடிய வைரஸ் தாக்குதல் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

அப்போதே அறிக்கை

அப்போதே அறிக்கை

இது தொடர்பாக 41 பக்க அறிக்கை ஒன்று டிரம்பிற்கு அப்போதே சென்றுள்ளது. அதில் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிரம்பிற்கு கீழ் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய டோடாஸ் பிலிப்சன் இந்த தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார். சிஎன்என் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை குறிப்பிட்டு இருக்கிறார்.

சொன்னது என்ன

சொன்னது என்ன

டிரம்பிற்கு விடுக்கப்பட்ட இந்த 41 பக்க எச்சரிக்கையில் உலகம் முழுக்க பரவும் சக்தி கொண்ட மிகப்பெரிய வைரஸ் ஒன்று நம்மை தாக்க வாய்ப்புள்ளது. இதற்கு எதிராக அமெரிக்கா உடனடியாக தயாராக வேண்டும். இந்த வைரஸ் பரவினால் அமெரிக்காவில் 5 லட்சம் பேர் பலியாக வாய்ப்புள்ளது. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் 3.79 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று அதில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எதையும் மதிக்கவில்லை

எதையும் மதிக்கவில்லை

இந்த நிலையில் நாங்கள் கொடுத்த எச்சரிக்கை எதையும் டிரம்ப் மதிக்கவில்லை . அதை மீறி டிரம்ப் செயல்பட்டார். அதன்பின் வுஹனில் கொரோனா வைரஸ் பரவிய போதும் கூட டிரம்ப் சுதாரிக்கவில்லை . அமெரிக்காவில் பரவிய பின்பும் கூட அவர் மிகவும் தாமதமாகவே செயல்பட்டார் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.டிரம்பிற்கு எதிராக வைக்கப்பட்டு இருக்கும் இந்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Huawei வைத்து China-வை அசைத்து பார்க்கும் உலக நாடுகள்
    யார் இவர் ?

    யார் இவர் ?

    வெள்ளை மாளிகையில் பணியாற்றிய டோடாஸ் பிலிப்சன் கடந்த ஜூன் மாதம்தான் பணியில் இருந்து விலகினார். தற்போது இந்த அதிர வைக்கும் புகாரை அவர் வைத்துள்ளார். இவருக்கும் கூட கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் அதில் இருந்து குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வெளியான 'Mitigating the impact of pandemic influenza through vaccine innovation' என்ற கொரோனா வைரஸ் குறித்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

    English summary
    President Trump knows about Coronavirus pandemic on Sep 2019 itself says White House Ex-Employee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X