அற்புதமான மனிதர்.. உலகமே அவரை கண்டு வியக்கிறது! மோடியை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தான் வெற்றி பெற்றபோது, போனில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியதாகவும், மோடி அற்புதமான மனிதர் என்றும் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா ஏற்கெனவே ட்ரம்பின் ஆட்சியை பார்த்திருக்கிறது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டு அவரது ஆட்சிக்காலம் முடிவுற்றபோது நடந்த வன்முறைகள் ட்ரம்பின் அரசியல் வாழ்க்கைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி என்றே கருதப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்குகள், ரகசிய ஆவணங்கை கொள்ளையடித்து சென்றதாக வைக்கப்பட்ட குற்றச்சாடு என, ட்ரம்ப்புக்கு எதிராக பெரிய பிளான் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் அவர் அதிபராகியுள்ளார்.

narendra modi trump usa


குடியரசு கட்சிக்கு என ஒரு கொள்கை இருக்கிறது. அது தடாலடியாக அனைத்து நவடிக்கைகளையும் மேற்கொள்ளும். ஆனால் இந்த கட்சியை சேர்ந்த ட்ரம்ப் அப்படிப்பட்ட ஆள் இல்லை. இதற்கு ஓர் உதாரணம்தான், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ அவர் சந்தித்தது. வேறு எந்த அமெரிக்க அதிபரும் யோசித்து கூட பார்க்க முடியாத செயலை 2019ல் அதிபராக இருந்தபோது ட்ரம்ப் செய்து காட்டினார். கிம்-ஐ தொடர்ந்து சீன அதிபரையும் ட்ரம்ப் நேரில் சந்தித்திருந்தார். இரு நாடுகளுடன் அமெரிக்காவுக்கான உறவு என்பது அவள்ளவு நல்லபடியாக இல்லை. ஆனாலும், இந்த நாடுகளுடன் அமெரிக்கா நட்பையே விரும்புகிறது என்பதை உணர்த்தும் விதமாக ட்ரம்ப்-கிம்-ஜி ஜிங்பிங் சந்திப்பு இருந்தது.

இந்த சந்திப்பு, உலக நாடுகளுடன் அமெரிக்க இணைந்து பயணிக்க விரும்புகிறது என்பதை தெளிவாக உணர்த்தியது. அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான அவருடைய நட்பு மிகவும் நெருக்கமாக இருந்தது. திறன்மிக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசா குறித்த முறையில் ட்ரம்ப் கொண்டு வந்த மாற்றங்கள் இந்தியாவில் பேசுபொருளாகின. மட்டுமல்லாது இந்துக்களின் விழாக்களுக்கு உணர்வுப்பூர்வமாக அவர் சொல்லும் வாழ்த்துக்களும், இந்தியாவுக்கும் - ட்ரம்ப்புக்கும் இடையேயான உறவை மேலும் அதிகரித்தது.

2019ல் நடத்தப்பட் ஹவுடி மோடி, 2020ல் நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வுகள் இந்த நட்பின் உச்சமாக கருதப்பட்டாலும், இந்தியா-அமெரிக்கா உறவை இந்த நிகழ்ச்சிகள் மேலும் வலுப்படுத்தியதாகவே பார்க்கப்பட்டது.

இப்படி இருக்கையில், இரண்டாவது முறையாக அவர் அதிபராக தேர்வான போது முதல் ஆளாய் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி குறித்து ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். “இந்திய பிரதமர் மோடி மிகவும் அற்புதமான மனிதர்; ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது நான் வெற்றி பெற்றபோது என்னை தொடர்புகொண்டு வாழ்த்திய தலைவர்களில் அவரும் ஒருவர்” என்று ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+