இந்தியா நினைத்தே பார்க்காதது.. ஈரானுக்கு பதில் வெனிசுலா.. டிரம்ப் அதிரடி அறிவிப்பின் பின்னணி
நியூயார்க்: ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகச் சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்து குறைந்த விலையில் அல்லது தடையற்ற முறையில் எண்ணெய் பெற இந்தியா திட்டமிட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா இனி ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்குப் பதிலாக வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியா இனி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

அதிபரினது அதிகாரப்பூர்வ விமானமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்'-ல் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இதற்கான ஒப்பந்தம் மற்றும் அதன் அடிப்படைக் கொள்கைகள் ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டன" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏன் இந்த மாற்றம்? - பழைய சிக்கல்களின் பின்னணி
கடந்த காலங்களில் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை ஈரானிடமிருந்து பெற்று வந்திருக்கிறது. ஆனால், ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகளால், ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்குப் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, பணப் பரிமாற்றம் மற்றும் கப்பல் காப்பீடு ஆகியவற்றில் பெரும் நெருக்கடி நிலவியது.
அதேபோல், வெனிசுலா மீதும் அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது. கடந்த மார்ச் 2025-ல், வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இதனால் வெனிசுலா உடனான வர்த்தகமும் முடங்கிப்போயிருந்தது.
வெனிசுலாவில் அதிரடித் திருப்பம்
தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த ஜனவரி 3-ம் தேதி, வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்தன. இதனைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா நாடு தற்போது அமெரிக்காவின் மேலாதிக்கக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
அங்கு தற்போது டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராகச் செயல்பட்டு வருகிறார். மதுரோவின் வீழ்ச்சிக்குப்பிறகு, வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு இருமடங்காக அதிகரித்திருக்கிறது. அதே சமயம், சீனாவிற்குச் சென்று கொண்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக நின்று போய் உள்ளது.
மோடி - ரோட்ரிக்ஸ் உரையாடல்
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு வலுசேர்க்கும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடையே வெள்ளிக்கிழமை முக்கியத் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.
இது குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லவும், எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கூட்டாண்மையை விரிவுபடுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்று பதிவிட்டிக்கிறார்.
இந்தியா மற்றும் வெனிசுலா இடையிலான இந்தப் புதிய உறவு என்பது வெறும் கச்சா எண்ணெயுடன் மட்டும் நின்றுவிடப் போவது கிடையாது.
வெனிசுலா வளமான நாடு, அங்கு விவசாயம் மற்றும் தாதுக்கள் எடுப்பதில் இந்திய நிறுவனங்கள் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் பலமான மருந்து உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் வெனிசுலாவில் காலூன்றத் திட்டமிட்டுள்ளன. வளரும் நாடுகளின் குரலாகத் திகழும் 'குளோபல் சவுத்' அமைப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.
ஈரானுடனான வர்த்தகச் சிக்கல்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் தவித்து வந்த இந்தியாவிற்கு, தற்போது அமெரிக்காவின் ஆசியுடன் வெனிசுலா எனும் புதிய கதவு திறந்து வைத்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பெட்ரோல், டீசல் விலையில் நீண்ட கால அடிப்படையில் ஒரு ஸ்திரத்தன்மையை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான்












Click it and Unblock the Notifications