நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வீக் எண்ட் ட்ரிப்".. அங்கே ரஷ்யா அட்டாக் செய்யும் போது பிடன் இப்படி பண்ணலாமா? ஏமாற்றிய அமெரிக்கா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உக்ரைனில் போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் பிடன் திடீரென செய்த செயல் ஒன்று கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Recommended Video

    Advice வேண்டாம், ஆயுதங்கள் கொடுங்க US-க்கு Volodymyr Zelensky பதிலடி | Oneindia Tamil

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் அதிகாரபூர்வமாக தொடங்கி உள்ளது. இத்தனை நாட்களாக உக்ரைன் - ரஷ்யா இடையே புகைச்சல் இருந்தது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வந்தது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை தடுக்கும் வகையில் புடின் போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    கடந்த 3 நாட்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் இது உலகப்போராக வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    சரணடைய வேண்டாம்...ரஷ்யா நிறுத்தாதவரை ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை - ஜெலன்ஸ்கி சரணடைய வேண்டாம்...ரஷ்யா நிறுத்தாதவரை ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை - ஜெலன்ஸ்கி

    பிடன் போர்

    பிடன் போர்

    அமெரிக்க அதிபர் பிடன் இந்த நிலையில் போருக்கு எதிராக முதல் நாள் கடுமையாக கருத்து தெரிவித்தார். இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபர் பிடன் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறார். ரஷ்யா அத்துமீறி செயல்படுவதாகவும், அதற்கான விலையை ரஷ்யா கொடுக்கும் என்று கூறி இருந்தார். மேலும் ரஷ்யாவின் ஏற்றுமதியை தடை செய்ததோடு, ரஷ்யாவின் 5 பெரிய வங்கிகளையும் அமெரிக்கா தடை செய்துள்ளது.

    ரஷ்யா எதிர்ப்பு

    ரஷ்யா எதிர்ப்பு

    ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் பெரிய அளவில் ரஷ்யாவிற்கு எதிராக இருக்காது. ஏனென்றால் உக்ரைன் நேட்டோ நாடு கிடையாது. இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிரான போரில் கடுமையாக பின் தங்கி உள்ளது. உக்ரைனை அமெரிக்கா ஏமாற்றிவிட்டதாகவும், உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    நேற்று ரஷ்யாவிற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த கண்டன தீர்மானம் கூட வெற்றிபெறவில்லை. ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வி அடைய செய்துவிட்டது. இதுவும் அமெரிக்காவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனுக்கு உதவும் வகையில் 350 மில்லியன் டாலர் ராணுவ உபகரணங்கள், பணம், ஆயுதங்களை வழங்க பிடன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    உக்ரைன் போர்

    உக்ரைன் போர்

    உக்ரைன் போரை அமெரிக்கா அணுகிய விதம் விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில்தான் தற்போது வார இறுதி நாட்களை செலவு செய்ய அதிபர் பிடன் தனது சொந்த ஊரான டெலவருக்கு சென்று இருக்கிறார். அங்கு ரஷ்யா போர் நடத்திக்கொண்டு இருக்கும் நிலையில் திடீரென பிடன் இப்படி டெலவருக்கு கிளம்பி சென்று இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து போர் மீது நடவடிக்கை எடுக்காமல் பிடன் டெலவருக்கு சென்றுள்ளார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    பிடனின் இந்த செயலை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். தனது வீக் எண்டை கொண்டாட பிடன் டெலவருக்கு சென்று இருப்பதாக மக்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு அமெரிக்கா உக்ரைனை ஏமாற்றிவிட்டதாகவும் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே தனது ஒரு வருட ஆட்சியில் பிடன் 28 சதவிகித நாட்களை டெலவரில் செலவு செய்தது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

     டெலவருக்கு சென்ற பிடன்

    டெலவருக்கு சென்ற பிடன்

    இந்த நிலையில்தான் பிடன் டெலவருக்கு சென்றுள்ளார். இந்த பிளான் கடைசி கட்டத்தில் போடப்பட்டது ஆகும். திடீரென டெலவருக்கு இவர் சென்றுள்ளார். அதோடு அங்கு உறவினர் ஒருவரின் மரண நிகழ்விலும் கலந்து கொள்ள இருக்கிறார். உக்ரைன் போர் பெரிய அளவில் ஐரோப்பிய போராக வெடிக்கும் ஆபத்து உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் இப்படி டெலவருக்கு சென்றது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Ukraine Russia war: US President Joe Biden leaves for Delaware to spend his weekend amid war crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X