Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவிற்கு எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்கும் அமெரிக்கா.. தடாலடி தடையை போட்ட பிடன் அரசு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சீனாவின் Huawei மற்றும் ZTE ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை தங்கள் நாட்டிற்குள் விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு இதேபோல Huawei நிறுவனத்திற்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது Huawei மற்றும் ZTE நிறுவனங்களின் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சவால் விடும் சீனா

சவால் விடும் சீனா

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் சீனா, அமெரிக்காவுக்கே பல விஷயங்களில் சவால் விட்டு வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கி, சதாரன பென்சில் வரை சீனா கை வைக்காத இடமே கிடையாது. இந்த வளர்ச்சியை அமெரிக்காவை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி என்பது அசுரத் தனமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உலகில் மிகப்பெரிய நுகர்வோர் கூட்டத்தை சீனா தன்வசப்படுத்தியுள்ளது. உலகில் அதிக நுகர்வோரை கொண்டுள்ள முதல் 500 நிறுவனங்களில் சீனாவின் நிறுவனங்கள் 143. அமெரிக்காவின் நிறுவனங்கள் 122.

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த 'வில்பர ரோஸ்' Huawei நிறுவனத்திற்கு விதித்த கட்டுப்பாடுகளை பட்டியலிட்டார். அதாவது, "அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை பலப்படுத்தவே தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நாட்டின் தொழில்நுட்பங்களை Huawei நிறுவனம் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. இதற்கு சட்டத்தில் இருக்கும் ஓட்டையே காரணம். தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மூலமா இந்த ஓட்டை அடைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

தடை

தடை

இந்த கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Huawei நிறுவனம் தயாரிக்கும் 'செமிகன்டக்டர்களை' அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய Huawei நிறுவனம் அமெரிக்காவின் அதிகாரிகளிடத்தில் ஒப்புதலை பெற வேண்டும். இது சீனாவை கடும் எரிச்சலூட்டியது. இதற்கு தங்கள் தரப்பிலிருந்து கண்டனத்தையும் பதிவு செய்தது. இவ்வாறு இருக்கையில், சீன நிறுவனங்களான Huawei மற்றும் ZTE தயாரித்த தகவல் தொடர்பு சாதனங்களை தங்கள் நாட்டில் விற்க தடை விதிக்கப்படுவதாக அமெரிக்காவின் 'ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்'(FCC) தெரிவித்துள்ளது.

 நாட்டின் பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்பு

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் உள்கட்டமைப்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சில தொழில்நுட்ப தயாரிப்புகளின் இறக்குமதி மற்றும் விற்பனையை தடையும் நோக்கில் இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் எல்லைக்குள் நம்பத்தகாத தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதன் மூலம் நாங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம். இந்த பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்" என்று 'ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்'(FCC) கூறியுள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

இந்த தடை காரணமாக Huawei மற்றும் ZTE உடன் பரவலாக பயன்படுத்தப்படும் Hikvision மற்றும் Dahua நிறுவனங்களின் கேமிராக்கள் உள்ளிட்ட மின்னணு சாதங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். FCCன் இந்த முடிவுக்கு கமிஷனில் இடம்பெற்றிருந்த அனைவரும் ஒருமித்த ஆதரவளித்துள்ளனர். அதேபோல இந்த தடை தொடர்பாக Huawei கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனா உச்சக்கட்ட கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவில் இதேபோல சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இதே போன்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பது, சீனாவை எதிர்க்க உலக நாடுகள் ஓரணியில் திரள்கின்றனவா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+